’இந்தியன்2’ படத்தின் அடுத்த அப்டேட்... ரசிகர்கள் உற்சாகம்!

'இந்தியன்2’
'இந்தியன்2’

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன்2’ படத்தின் அடுத்த சிங்கிள் வெளியாக உள்ள தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘இந்தியன்2’ திரைப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது. படத்தின் முதல் பாகம் வெளியாகி 28 ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில் ‘இந்தியன்’ திரைப்படம் ஜூன் 7 அன்று ரீ- ரிலீஸ் ஆகிறது.

’இந்தியன்2’ படத்தின் ரிலீஸூம் நெருங்கி வருவதால் முழு வேகத்தில் பட புரோமோஷன்களை படக்குழு தொடங்கியுள்ளது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜுன் 1 அன்று நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. படத்தில் இருந்து முதல் பாடலான ‘பாரா’ வெளியான நிலையில், இரண்டாவது பாடல் குறித்தான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

’இந்தியன்’ படத்தில் இடம் பெற்றிருந்த ‘கப்பலேறி போயாச்சு...’ பாடல் பாணியில் அமைந்திருந்தது ‘பாரா’ பாடல். இப்போது சித்தார்த் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் இருக்கும் இரண்டாவது சிங்கிள் குறித்தான அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனால், மே 29ம் தேதி வெளியாகும் இது காதல் பாடலாக தான் இருக்கும் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 ’இந்தியன்2’
’இந்தியன்2’

சமூகத்தில் நடக்கும் அநீதிகள் பற்றி வீடியோவாக சமூகவலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் சித்தார்த். அவருக்கு ஒரு பிரச்சினை வரும் போது இந்தியன் தாத்தா திரும்பி வருவது தான் ‘இந்தியன்2’ படத்தின் கதை என இணையத்தில் உலா வருவது குறிப்பிடத்தக்கது. என்றாலும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட இந்தியன் தாத்தாவின் மேனரிஸத்தைத் திரையரங்கில் கண்டு ரசிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

135 கி.மீ. வேகம்... கரையை கடக்கும் போது சூறையாடிய 'ரெமல்' புயல்: மேற்கு வங்கத்தில் தொடரும் கனமழை!

முதல் முறையாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பம்... ராஜஸ்தான் மக்கள் அதிர்ச்சி!

திருப்பதி அருகே பயங்கர விபத்து... சாலைத் தடுப்பில் கார் மோதி 4 பேர் பலி!

சோகம்... சரத்குமார் நடித்த 'மாயி' பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

இடைக்கால ஜாமீனை 7 நாள்கள் நீட்டிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in