Bigg Boss7: அசிங்கப்படுத்துகிறார்கள்... முதல் நாளே கதறி அழுத அர்ச்சனா!

கதறி அழுத அர்ச்சனா
கதறி அழுத அர்ச்சனா

பிக் பாஸ்7 தமிழ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டில் நுழைந்துள்ள அர்ச்சனா முதல் நாளே கதறி அழுதுள்ள புரோமோ ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்படும் போட்டியாளர்கள்
சுமால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்படும் போட்டியாளர்கள்

பிக் பாஸ்7 தமிழில் முதல் முறையாக இந்த சீசனில் அதிரடியாக ஐந்து போட்டியாளர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். பிக் பாஸ் வீட்டில் யார் மீது அதிக நம்பிக்கை இல்லையோ அவர்களை வீட்டின் கேப்டன் பூர்ணிமா தேர்ந்தெடுத்து ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பும்படியான புரோமோ காலை வெளியானது. இதில் விசித்ராவுடன் சேர்த்து தற்போது உள்ளே வந்த ஐந்து போட்டியாளர்களும் ஸ்மால் பாஸ் வீட்டிற்குச் செல்கின்றனர்.

வந்த முதல் நாளே இப்படி பிக் பாஸ் வீட்டை விட்டு துரத்தி விட்டார்களே என்று இந்த புரோமோ குறித்து ரசிகர்கள் கமென்ட் செய்து கொண்டிருக்க தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரோமோவில் அர்ச்சனா கதறி அழுது கொண்டிருக்கிறார்.

’வீட்டிற்குள் வந்த முதல் நாள் சிரித்து பேசாமல் இப்படி எங்களை மரியாதைக் குறைவாக நடத்த வேண்டுமா? எங்களை அசிங்கப்படுத்த வேண்டுமா?’ என அர்ச்சனா கதறி அழ, மாயா அவரைத் தூண்டிவிடும் விதமாக ‘அப்படி எல்லாம் சிரித்து பேச மாட்டோம். இதற்கெல்லாம் நீங்கள் தயாராகிதான் வரவேண்டும்’ என்ற ரீதியில் பேசுகிறார். வைல்ட் கார்டு போட்டியாளர்களால் பிக் பாஸ் வீடு பரபரப்பாகி இருக்கிறது என்பதை இன்றைய புரோமோ மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in