கையில் காயம்...12 மணி நேர பயணம்; விஜய் வாக்குப்பதிவு தாமதமானது ஏன்?

விஜய்
விஜய்

நடிகர் விஜய் இன்று மதியம் 12.30 மணியளவில் சென்னை நீலாங்கரையில் வாக்களித்தார். பொதுவாக தேர்தல் சமயங்களில் காலையிலேயே வாக்களித்து விடும் விஜய் இந்த முறை மதியமே வந்தார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'GOAT' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காக படக்குழு ரஷ்யா சென்றது. வாக்களிக்கும் பொருட்டு படக்குழுவினர் இன்று சென்னை திரும்பினர். ஆனால், அதிகாலையிலேயே வந்துவிடுவார்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று மதியம் தான் சென்னை திரும்பியது படக்குழு. இதற்கு துபாயில் ஏற்பட்ட வெள்ளம்தான் காரணம் என்கிறார்கள்.

ரஷ்யாவில் இருந்து துபாய் வந்து தான் சென்னை திரும்ப முடியும். ஆனால், துபாயில் ஏற்பட்ட மோசமான வெள்ளப் பெருக்குக் காரணமாக விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், மாஸ்கோவில் இருந்து சுமார் 12 மணி நேரம் பயணப்பட்டு வாக்களிக்க சென்னை வந்திருக்கிறார் விஜய்.

வாக்களிக்க வந்தபோது நடிகர் விஜயின் தலை மற்றும் கையில் சிறுகாயம் ஏற்பட்டு இருந்தது. இதனைப் பார்த்து ரசிகர்கள் பதறிப் போனார்கள். 'GOAT' படப்பிடிப்பில் பைக்கில் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டபோது ஏற்பட்ட விபத்துதான் அது என்றும் தெரிய வந்துள்ளது.

தலை, கையில் காயத்துடன் விஜய்
தலை, கையில் காயத்துடன் விஜய்

இந்தப் பயணக்களைப்பு மற்றும் வாக்குச்சாவடியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவினால் நடிகர் விஜய் சோர்வாகக் காணப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in