புற்றுநோயால் காலமான 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நடிகர்... கணவர் உருக்கம்!

இயன் கெல்டர்
இயன் கெல்டர்

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீரிஸில் கெவன் லானிஸ்டராக நடித்த இயன் கெல்டர் தனது 74 வயதில் காலமானார். இதுகுறித்து அவரது கணவர் உருக்கமான பதிவைப் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் என்பவர் எழுதிய ‘ஏ சாங்க் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர் (A Song of Ice and Fire)’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தொடர்தான் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. ஹெச்பிஓ தொலைக்காட்சியில் கடந்த 2011ல் ஒளிபரப்பான இந்தத் தொடர் கடந்த 2019ல் எட்டு சீசன்களோடு முடிவடைந்தது. உலகம் முழுவதும் இந்தத் தொடருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’
‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’

இந்தத் தொடரில் கெவன் லானிஸ்டராக நடித்தவர் இயன் கெல்டர். கடந்த சில மாதங்களாக பித்தநாள புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று காலமானார். இதனை அவரது கணவர், நடிகர் பென் டேனியல்ஸ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், உருக்கமான பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் பகிர்ந்திருப்பதாவது, “எனது கணவர் இயன் கெல்டர் மறைந்துவிட்டார் என்ற செய்தியை சுக்கு நூறாக உடைந்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். கடந்த டிசம்பர் மாதத்தில் அவர் பித்தநாள புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவரைப் பார்த்துக் கொள்வதற்காக எனது வேலைகளை விட்டுவிட்டு உடனிருந்தேன். ஆனால், அவரது முடிவு இவ்வளவு சீக்கிரம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

நாங்கள் இருவரும் 30 வருடங்களுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்தோம். இனி அவர் இல்லாமல் நான் என்ன செய்வேன் என்று தெரியவில்லை. இந்தப் புகைப்படம் கிறிஸ்துமஸ் சமயத்தில் எடுக்கப்பட்டது.

புற்றுநோயால் கடுமையான துன்பம் அனுபவித்தபோதும் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்தார். உன்னை நிச்சயம் மிஸ் செய்வேன். உன் ஆத்மா சாந்தி அடையட்டும்!’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவருக்கு பலரும் தங்கள் ஆறுதலை சொல்லி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!

ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

அனுபவம் பத்தாது... அரசியல் வாரிசாக அறிவித்தவரை அதிரடியாக நீக்கிய மாயாவதி

பரபரப்பு... பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in