`பாண்டியன் ஸ்டோர்ஸ்2' புரோமோ... ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

'பாண்டியன் ஸ்டோர்ஸ்2' புரோமோவில்
'பாண்டியன் ஸ்டோர்ஸ்2' புரோமோவில்

'பாண்டியன் ஸ்டோர்ஸ்2' சீரியலின் புரோமோ வெளியாகியுள்ள நிலையில் அது ரசிகர்களை ஏமாற்றி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் சமீபத்தில் நிறைவடைந்தது. அண்ணன் -தம்பி பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த சீரியல் முடிவடைந்ததை அடுத்து இதன் இரண்டாம் பாகத்திற்கான புரோமோவும் சூட்டோடு சூட்டாக வெளியாகியுள்ளது.

முதல் பாகம் அண்ணன் தம்பி பாசத்தை மயமாக வைத்து உருவானது போல இரண்டாவது பாகத்தில் அப்பா- மகன் பாசத்தை மையமாகக் கொண்டு இந்த சீரியல் நகர்கிறது என்று இந்த புரோமோ பார்க்கும்போது தெரிகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ்

ஆனால், 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' இரண்டாம் பாகத்தில் ஸ்டாலின் தவிர மற்ற அனைவருமே மாற்றப்பட்டு உள்ளனர். ஸ்டாலின் வழக்கம்போல் மூர்த்தியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தொண்ணூறுகளில் கலக்கிய நடிகை நிரோஷா நடிக்கிறார். இதில் மூர்த்தியின் மகன்களாக 3 பேர் நடிக்கின்றனர். இந்த சீசன் விரைவில் தொடங்க உள்ளது.

முதல் சீசனில் நடித்தவர்களே இரண்டாவது சீசனிலும் நடிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் மூர்த்தி கதாபாத்திரம் மட்டுமே அப்படியே உள்ளது. மற்ற நடிகர்கள் அனைவரும் புதிதாக மாற்றப்பட்டுள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை உருவாக்கி உள்ளதாக கமெண்ட்டில் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in