ரசிகர்களுக்கு கொண்டாட்டம்... தீபாவளிக்கு ஜெயிலர், துணிவு படங்கள் டிவியில் ஒளிபரப்பு!

தீபாவளி 2023 ரிலீஸ் படங்கள்
தீபாவளி 2023 ரிலீஸ் படங்கள்

இந்த வருடம் தீபாவளிக்கு என்னென்ன படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, பலகாரங்களோடு வெளியாகும் புது படங்களும் நம் கொண்டாட்டத்தில் இணையும். திரையரங்குகளில் படங்கள் பார்ப்பதோடு வீட்டில் தொலைக்காட்சியில் படங்கள் பார்த்து மகிழ்பவர்களும் இருக்கிறார்கள். அதற்கேற்ப தொலைக்காட்சி சேனல்களும் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான படங்களை பண்டிகை நாட்களில் ஒளிபரப்புவார்கள். அப்படி இந்த வருட தீபாவளிக்கு என்னென்ன படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.

’ஜெயிலர்’:

'ஜெயிலர்’ படம்
'ஜெயிலர்’ படம்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா நடிப்பில் வெளியான படம் ‘ஜெயிலர்’. படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக சுமார் 600 கோடி ரூபாயைப் பெற்றது. ’ஜெயிலர்’ படம் வெளியான பிறகு இதன் வெற்றி விழா என்ற பெயரில் நடந்த நிகழ்வில் படம் சுமார் என்பதை ரஜினிகாந்தே ஒப்புக் கொண்டார். மேலும், படத்தில் இடம்பெற்றுள்ள அதிக அளவிலான வன்முறை காரணமாகவும் இந்தப் படம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்தப் படம் சன் தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்பாக ஒளிபரப்பாகிறது.

’துணிவு’:

துணிவு படப்பிடிப்புத் தளத்தில்...
துணிவு படப்பிடிப்புத் தளத்தில்...

வங்கி கொள்ளை என்ற ஒன்லைனை வைத்து வெளியான படம் ‘துணிவு’. வினோத் இயக்கத்தில் நடிகர்கள் அஜித், மஞ்சு வாரியர் என பலரும் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் கலைஞர் தொலைக்காட்சியில் தீபாவளிப் பண்டிகைக்காக வெளியாகிறது.

’மார்க் ஆண்டனி’:

விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம்
விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விஷால் என பலரும் நடித்திருந்த இந்தப் படம் கடந்த செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை ஒட்டி வெளியானது. டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்தப் படம் தீபாவளிக்கு ஒளிபரப்பாகிறது.

’போர் தொழில்’:

‘போர் தொழில்’ திரைப்படத்தில் அசோக் செல்வன் - சரத் குமார்
‘போர் தொழில்’ திரைப்படத்தில் அசோக் செல்வன் - சரத் குமார்

சமீபத்தில், தமிழ் சினிமாவில் வெளியான க்ரைம் த்ரில்லர் படங்களில் பேசுபொருளாகி வெற்றிப் பெற்றது ‘போர் தொழில்’ திரைப்படம். கமர்ஷியலாக படத்தில் பெரிதாக எந்தவிதமான சமரசமும் இல்லாமல் சென்ற கதையில் அசோக்செல்வன் - சரத்குமார் இணையும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. விஜய் தொலைக்காட்சியில் இந்தப் படம் தீபாவளிக்கு ஒளிபரப்பாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in