இத்தனை நாட்களாய் இவர்களின் அன்புக்காக ஏங்கி இருந்தேன்... விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சிப் பதிவு!

மகன்களுடன் நயன்தாரா...
மகன்களுடன் நயன்தாரா...

மகன்களை நயன்தாரா கட்டியணைத்து கொஞ்சும்படியான கியூட்டான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன். மலேசியா, சிங்கப்பூர் பகுதிகளில் படப்பிடிப்பை முடித்துவிட்டு மகன்களை பார்க்க வந்திருக்கிறார் விக்கி.

நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடியின் மகன்கள் உயிர் மற்றும் உலக்கின் கியூட் புகைப்படங்களுக்கு இணையத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மகன்களின் செல்ல சேட்டைகள், கியூட்டான புகைப்படங்கள் என அவ்வப்போது இணையத்தில் இவர்கள் புகைப்படங்கள் பகிர்ந்தால் லைக்ஸ் அள்ளும். அந்தவகையில், நயன்தாரா உலக் மற்றும் உயிர் இருவரையும் கட்டியணைத்து அமர்ந்திருக்கும்படியான புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல்ஐசி’ படத்தை விக்கி தற்போது இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பிற்காக கடந்த சில வாரங்களாக மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்குச் சென்றிருந்தார் விக்னேஷ் சிவன்.

இப்போது படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்பியிருக்கும் அவர், தனது செல்ல மகன்களையும் மனைவி நயன்தாராவையும் சந்தித்த புகைப்படங்களைப் பகிர்ந்து, ‘சிங்கப்பூர் & மலேசியாவில் மறக்க முடியாத படப்பிடிப்பு அனுபவத்தை அடுத்து இப்போது என்னுடைய உயிர் மற்றும் உலக்கை சந்தித்து இருக்கிறேன். இத்தனை நாட்கள் அவர்களின் அன்புக்காக ஏங்கி இருந்தேன். இப்போது மீண்டும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி’ எனக் கூறியுள்ளார்.

நயன்தாரா இப்போது பிசினஸ், குழந்தைகள் வளர்ப்பு என ரிலாக்ஸாக நேரம் செலவிட்டு வருகிறார். இதுதவிர்த்து ‘டெஸ்ட்’, ‘மண்ணாங்கட்டி’ ஆகிய படங்கள் இவரது கைவசம் உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தூத்துக்குடியில் கதறியழுத மூதாட்டி... கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்!

எங்க தொகுதிக்கு என்னதான் ஆச்சு?... கலங்கும் மயிலாடுதுறை காங்கிரஸ்!

அனல் பறக்கும் தூத்துக்குடி... இன்று ஒரே நாளில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

தேச தந்தையை பாதுகாக்க நன்கொடை தந்தை என்ன செய்வார்? பாஜக மீது காங்கிரஸ் தாக்கு

அநியாயம் பண்ணாதீங்க...விஜய் ரசிகர்களிடம் கதறிய இயக்குநர் வெங்கட்பிரபு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in