சோஷியல் மீடியா விமர்சனம் படத்தை நேரடியாக பாதிக்காது: இயக்குநர் வெற்றிமாறன்!
படத்தைப் பற்றி வரக்கூடிய சோஷியல் மீடியா விமர்சனங்கள் படத்தை நேரடியாக பாதிக்காது என இயக்குநர் வெற்றிமாறன் அதிரடியாகக் கூறியுள்ளார்.

’பொல்லாதவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான வெற்றிமாறன் தற்போது தவிர்க்க முடியாத முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். அவரது இயக்கத்தில் தற்போது ‘விடுதலை 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.
விஜய்சேதுபதி, மஞ்சு வாரியர் நடிப்பில் டீஏஜிங் டெக்னாலஜி இரண்டாம் பாகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும், இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்து சூர்யா நடிப்பில் ‘வாடி வாசல்’ படத்தையும் அவர் இயக்க உள்ளார்.
இந்த நிலையில், சமூகவலைதளத்தில் படம் குறித்து வெளியாகும் விமர்சனங்கள் பற்றி வெற்றிமாறன் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் படம் குறித்து வரக்கூடிய விமர்சனங்கள் படத்தை நேரடியாக பாதிக்காது. இருந்தாலும் சில தயாரிப்பாளர்கள் இதுபோன்ற விமர்சகர்களுக்கு காசு கொடுத்து படம் பற்றி நல்ல ரிவியூ கொடுக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள்.
இதற்குக் காரணம், படம் பற்றி வரக்கூடிய நெகடிவான விமர்சனங்கள் படக்குழுவைப் பாதிக்கும் என்பதால்தான்” என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
சேலையில் ஒய்யாரமாய் வலம் வரும் பிரபல நடிகை
உஷார்... சிக்கன் பிரியாணியால் சுயநினைவை இழந்த 3 பேர்!
மணி ரத்னத்தால வாழ்க்கையே போச்சு.. நாசம் பண்ணிட்டார்... பொதுவெளியில் புலம்பிய பிரபலம்!
கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த 2ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு