மரணப்படுக்கையில் மன்னிப்புக் கேட்ட மனோபாலா... சுந்தர்.சி பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

மனோபாலா- சுந்தர்.சி
மனோபாலா- சுந்தர்.சி

மறைந்த நடிகர், இயக்குநர் மனோபாலா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தார். அப்போது தன்னிடம், படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு அவர் மன்னிப்பு கேட்டதாக இயக்குநர் சுந்தர்.சி பகிர்ந்துள்ளார்.

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர்கள் தமன்னா, ராஷிகண்ணா, யோகிபாபு உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘அரண்மனை4’. வரும் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் முந்தைய மூன்று பாகங்களிலும் மனோபாலா நகைச்சுவை கதாபாத்திரத்தில் கலக்கி இருப்பார். ஆனால், இந்தப் படம் ஆரம்பித்தபோது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவரால் நான்காம் பாகத்தில் நடிக்க முடியவில்லை.

படத்தில் மனோபாலா இல்லாதது குறித்தும் அவர் தன்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்தும் சுந்தர்.சி யூடியூப் தளம் ஒன்றில் கொடுத்தப் பேட்டியில், “இந்தப் படத்தை நாங்கள் ஆரம்பித்தபோது மனோபாலா சார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தார்.

அவர் இல்லாதது எங்கள் படத்திற்கு பெரிய இழப்புதான். ஒருவாரத்தில் அவருடைய காட்சிகள் படமாக்கப்பட இருந்தபோது, அவரிடம் இருந்து எனக்கு மெசேஜ் வந்திருந்தது. மருத்துவமனையில் அவர் இருக்கும் புகைப்படங்களை அனுப்பி, ‘என்னால் உனக்கு இடைஞ்சல் வரக்கூடாது. வேறு யாரையாவது நடிக்க வைத்துக் கொள்’ என்று சொல்லி மன்னிப்பு கேட்டு இருந்தார். உடனே, நான் அவருக்கு ஃபோன் செய்து ‘விடுங்க சார்! இந்தப் படம் இல்லைன்னாலும் அடுத்து பண்ணிக்கலாம்’ என்று சொன்னேன்.

மனோபாலா
மனோபாலா

அதற்கு அவர், ’இல்லடா, நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. இனிமேல் படங்களில் நடிக்க முடியுமா எனத் தெரியாது’ என்று சொன்னார். அதைக் கேட்டதும் எனக்கு கண் கலங்கிருச்சு. அந்த வார்த்தைகளை எப்போதும் மறக்க மாட்டேன்” என நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...   


இன்றும், நாளையும்.... சென்னை வானிலை மையம் தந்த சர்ப்ரைஸ்!

பரபரப்பு... அமைச்சர் உதயநிதி வந்த ஹெலிகாப்டரை சுற்றி வளைத்த தேர்தல் பறக்கும் படை!

கும்பிடுவது போல கையை வைத்து கொண்டு தானே காருக்குள் இருந்தேன்... போலீஸாருடன் அண்ணாமலை வாக்குவாதம்!

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளால் பயங்கரத் தாக்குதல்... வெள்ளை மாளிகை முக்கிய அறிவிப்பு!

என்னைப் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கிறார்கள்... பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in