என் மனைவிக்காக கூட மைக் பிடித்ததில்லை... ஏ.சி.சண்முகத்துக்காக நெகிழ்ந்த சுந்தர்.சி!

சுந்தர் சி
சுந்தர் சி

வாணியம்பாடியில் பாஜக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து இயக்குநர் சுந்தர்.சி இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் பேசிய அவர் தன் மனைவிக்காகக் கூட மைக் பிடிக்கவில்லை என கலகலப்பாகப் பேசியுள்ளார்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜன நாயக கூட்டணி பாஜக சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தும்பேரி, உதயேந்திரம்,வாணியம்பாடி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இயக்குநர் சுந்தர்.சி இன்று தீவிர இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும் பாஜகவினர் அம்பேத்கர், மோடி, காமராஜர்,வீரப்பன் வேடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய சுந்தர் சி, “எண் இரண்டை அழுத்தி தாமரை சின்னத்தில் வாக்களித்து முதலிடத்திற்கு அனுப்ப வேண்டும். நான் சினிமாவில் நிறைய ஹீரோக்களை பார்த்துள்ளேன். ஆனால், நிஜத்தில் நான் பார்த்த ஒரே ஹீரோ ஏ.சி. சண்முகம் மட்டும் தான். எந்த பதவியிலும் இல்லாத போது சொந்த பணத்தில் சொல்லாமல் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இவர் வெற்றி பெற்றால் இவர் சொல்லிய பல திட்டங்களை நிறைவேற்றுவார் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார்.

மேலும், “நான் சினிமாவில் 4 அரண்மனைகள் கட்டியுள்ளேன். ஆனால், ஏ.சி. சண்முகம் நிஜத்தில் 6 தொகுதியில் 6 அரண்மனைகளை போன்று திருமண மண்டங்களை கட்டி தருவார். இலவச மருத்துவமனை,பள்ளி கூடங்கள், ஒவ்வொரு தொகுதியில் 100 இளைஞர்களை தேர்வு செய்து பள்ளி கூட கல்லூரி செலவுகளை ஏற்று கொள்வார். ஒவ்வொரு வீட்டில் நடைபெறும் திருமணத்துக்கு ரூபாய் 10 ஆயிரம் கொடுப்பார்.

என் மனைவி தேர்தலில் நின்ற போது கூட நான் மைக்கை பிடித்து பிரச்சாரம் செய்யவில்லை. இன்று எங்க அண்ணன் ஏ.சி. சண்முகம் அவர்களுக்கு மைக்கை பிடித்து பிரச்சாரம் செய்து வருகிறேன். சிவனின் பெருமையை சிவ புராணம் சொல்வது போல வேலூர் பெருமையை ஏ.சி. சண்முகம் உயர்த்தி காட்டுவார்” என்று அவர் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு... மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணி குடும்பம்... சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

அசுரத்தனமான உழைப்பு... விக்ரம் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ’தங்கலான்’ வீடியோ!

40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயற்சி... காருடன் ரூ.2.25 லட்சத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in