ரஜினி மகள் இயக்கும் அடுத்த படம்... ஹீரோ இவர்தான்?

குடும்பத்துடன் ரஜினி...
குடும்பத்துடன் ரஜினி...

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளும் சீக்கிரம் இயக்கத்திற்குத் திரும்ப இருக்கிறார். அந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கப் போவது யார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

ஐஸ்வர்யாவுடன் ரஜினி...
ஐஸ்வர்யாவுடன் ரஜினி...

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டு மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா இருவரும் இயக்கத்தில் தீவிர ஆர்வம் கொண்டவர்கள். அப்பாவைப் போல படங்களில் நடிக்காமல், கேமராவுக்கு பின்னால் இருக்கும் பணிதான் என்பதை முடிவு செய்து அதில் இயங்கி வருகின்றனர். மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷூடனான பிரிவுக்குப் பின்பு இயக்கத்தில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளார். இப்போது அவரது இயக்கத்தில் ‘லால் சலாம்’ படம் வெளியாக உள்ளது. இளைய மகள் செளந்தர்யாவும் இதற்கு முன்பு ‘கோச்சடையான்’, ‘விஐபி2’ படங்களை இயக்கியவர். திருமணம், குழந்தை என சினிமாவுக்கு பிரேக் கொடுத்தவர் இப்போது மீண்டும் இயக்கத்திற்கு வருகிறார்.

செளந்தர்யாவுடன் ரஜினி...
செளந்தர்யாவுடன் ரஜினி...

அவர் உருவாக்கி இருக்கும் கதையில் ரஜினியின் தீவிர ரசிகர், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறாராம். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ரஹ்மான் அல்லது ஜிவி பிரகாஷ் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க இருக்கிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. செளந்தர்யாவின் இரண்டாவது இன்னிங்ஸ்-க்கு ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!

முன்கூட்டியே நடக்கிறது பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்... தேர்தலையொட்டி அரசு அறிவிப்பு!

பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம்... மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; தீப்பிழம்பான நகரம்... 6 பேர் பலி, 60 பேர் படுகாயம்!

டெஸ்ட் போட்டி.... இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in