செல்வராகவன் படப்பிடிப்பில் நேர்ந்த சிக்கல்... ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

இயக்குநர் செல்வராகவன்
இயக்குநர் செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இதில்தான் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 ‘7ஜி ரெயின்போ காலனி’
‘7ஜி ரெயின்போ காலனி’

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர்கள் கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘7ஜி ரெயின்போ காலனி’. படம் வெளியாகி பத்து வருடங்களை நெருங்கும் நிலையில், சமீபத்தில் இதன் இரண்டாம் பாகம் உருவாவதாக தகவல் வெளியானது. இதன் திரைக்கதைப் பணியில் தீவிரமாக இருந்த செல்வராகவன் தற்போது படப்பிடிப்பையும் தொடங்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா மற்றும் இன்னும் சில நடிகர்களே இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்தப் படத்திற்குத் தற்போது புது சிக்கல் வந்துள்ளது.

 ‘7ஜி ரெயின்போ காலனி’
‘7ஜி ரெயின்போ காலனி’

இதன் படப்பிடிப்பு சீக்கிரம் நிறைவடைந்து ரிலீஸ் தேதியும் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இதன் படப்பிடிப்பு அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் இரண்டாம் பாகத்தை 15 கோடியில் முடிக்க திட்டமிட்டு இருந்தார் செல்வராகவன். ஆனால், படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகமானதால், கடந்த 20 நாட்களாக நடந்து வந்த படப்பிடிப்பை நிறுத்தியுள்ளனர்.

இதன் பிறகு செல்வராகவன் மற்றும் இதன் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் இருவருக்கும் இடையே சுமுகமான தீர்வு கிடைத்தால் மட்டுமே இந்த படத்தின் படப்பிடிப்பு இனி தொடர வாய்ப்பு இருப்பதாகவும் வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


இன்று கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார் சனிபகவான்... திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள்!

2023 Rewind | மனதை உலுக்கிய மரணங்கள்... மீளா துயரில் ஆழ்த்திய பிரபலங்கள்!

கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற இளம்பெண்!

அதிர்ச்சி... கொசுமருந்தை குடித்த ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

குட் நியூஸ்... அரிசி விலை குறையப்போகிறது; மத்திய அரசின் ஏற்பாடுகள் தீவிரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in