ரஜினியின் ‘கூலி’ 1000 கோடி வசூலிக்கும்... வாழ்த்திய இயக்குநரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ரஜினியின் ‘கூலி’ 1000 கோடி வசூலிக்கும்... வாழ்த்திய இயக்குநரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் டைட்டில் அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. இதைப் பார்த்த குஷியில் இயக்குநர் ஒருவர், ‘படம் நிச்சயம் 1000 கோடி ரூபாய் வசூலிக்கும்’ என ஆரூடம் சொல்ல, நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

’வேட்டையன்’ படத்தை முடித்த கையோடு அடுத்து ரஜினி தன்னுடைய 171-வது படத்தைத் தொடங்குகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு ‘கூலி’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. படத்திற்கான டைட்டில் அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. பிளாக் அண்ட் வொயிட் மோடில், தங்க நிற ஹைலைட்டோடு ரெட்ரோ லுக்கில் இருந்த ரஜினிக்கு ரசிகர்கள் ஃபயர் விட்டு கொண்டாடினர். மேலும், அவரது பழைய படங்களோடு ஒப்பிட்டு டீகோட் செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.

’மாஸ்டர்’, ‘லியோ’ உள்ளிட்ட லோகேஷின் முந்தைய படங்களில் திரைக்கதையில் அவருடன் இணைந்து பணியாற்றியவர் ’மேயாத மான்’ இயக்குநர் ரத்னகுமார். இவர் ‘கூலி’ டைட்டில் டீசரைப் பார்த்துவிட்டு தனது எக்ஸ் பக்கத்தில், ‘சூப்பர் ஸ்டார் படத்திற்கு ஏற்ற டைட்டில் இது! பிளாக் அண்ட் வொயிட் டோன், கோல்டு ஹைலைட்ஸ், இசைத்தேர்வு என அனைத்தும் சரியாக அமைந்துள்ளது.

மேஜிக்கல் 4 டிஜிட் நம்பர் வசூலை (ஆயிரம் கோடி ரூபாய்) படம் தொட வேண்டும்; நிச்சயம் அது நடக்கும். ‘முயற்சி மெய் வருத்தக் ‘கூலி’ தரும்’’ எனக் கூறியுள்ளார். ‘கூலி’ படத்தில் இணை இயக்குநராக ‘மாநகரம்’, ‘மாவீரன்’ படங்களில் பணியாற்றிய சந்துரு என்பவர் இணைந்துள்ளார்.

ரஜினி- ரத்னகுமார்
ரஜினி- ரத்னகுமார்

இந்நிலையில், ரத்னகுமாரின் 1000 கோடி பதிவுக்கு ரஜினி ரசிகர்கள் திட்டி வருகின்றனர். இதற்கு முன்பு, ‘லியோ’ படத்தின் வெற்றிவிழாவின் போது ரஜினி- விஜய் ரசிகர்கள் மத்தியில் ‘காக்கா- கழுகு’ சண்டை உக்கிரமாக நடந்து கொண்டிருந்த சமயம் அது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட ரத்னகுமார், ”ஒரே சூப்பர்ஸ்டார் விஜய்தான். என்னதான் உயரப் பறந்தாலும் கழுகு பசிக்கு கீழே வந்துதான் ஆக வேண்டும்” என ரஜினிகாந்தை தாக்கிப் பேசினார்.

இது அந்த சமயத்தில் ரஜினி ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், ‘கூலி’ படத்தில் லோகேஷூடன் இணைந்து ரத்னகுமார் பணியாற்றக் கூடாது என்றும் சொல்லி வந்தனர். அதுபோலவே, இவர் இந்தப் படத்தில் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ’அப்போது ரஜினியை தாக்கிவிட்டு இப்போது வாழ்த்துவது ஏன்?’ என ரசிகர்கள் இணையத்தில் ரத்னகுமாரை இப்போது திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in