கையில் சிகரெட், கிளாஸ்; நடிகையுடன் நைட் பார்ட்டி போன ராம்கோபால் வர்மா... பட பப்ளிசிட்டிக்காக இப்படியா?

நடிகையுடன் நைட் பார்ட்டியில் ராம் கோபால் வர்மா...
நடிகையுடன் நைட் பார்ட்டியில் ராம் கோபால் வர்மா...

தான் இயக்கிய படம் இந்த மாதம் வெளியாவதை ஒட்டி ராம் கோபால் கோபால் வர்மா அந்தப் படத்தின் நடிகையுடன் நைட் பார்ட்டி சென்றுள்ள வீடியோவும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகையுடன் ராம் கோபால் வர்மா...
நடிகையுடன் ராம் கோபால் வர்மா...

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. தான் இயக்கும் படங்களில் சர்ச்சைகளை அள்ளித் தெளிப்பது மட்டுமல்லாது, சமூகவலைதளங்களில் எதாவது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவிப்பது ராம் கோபால் வர்மாவின் வாடிக்கை. நாகர்ஜூனா, ஸ்ரீதேவி என சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படங்களை இயக்கி வெற்றிக் கண்ட இவர், கடந்த சில வருடங்களாக எடுக்கும் படங்கள் அனைத்துமே திரைத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் லெஸ்பியனை மையமாகக் கொண்ட ‘டேஞ்சரஸ்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படத்தை விளம்பர படுத்துகிறேன் பேர்வழி என அந்தப் படத்தில் நடித்திருந்த நடிகை ஆஷு ரெட்டியின் காலடியில் அமர்ந்து கொண்டு, அவரின் காலை வருடி, ஒவ்வொரு விரலுக்கும் முத்தம் கொடுத்து முகம் சுளிக்க வைத்தார். இப்படி பல சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர்தான் ராம்கோபால் வர்மா.

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கையை ‘வியூகம்’ என்ற தலைப்பில் படமாக எடுத்து வருகிறார். இதில் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் அஜ்மல் நடித்துத்துள்ளார். இந்த படத்தில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாண் ஆகியோரின் கதாபாத்திரங்களும் வருகின்றன. இவர்கள் இருவரையும் தொடர்புபடுத்தி படத்தில் பல சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதுமட்டுமல்லாது, சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோர் இடம்பெற்றிருக்கும்படியான போஸ்டர் ஒன்றையும் படத்திற்காக வெளியிட்டார். அந்தப் போஸ்டர் இருவரையும் இழிவுப்படுத்தும் வகையில் இருந்ததால்,தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் வியூகம் படத்தின் போஸ்டரை தீ வைத்து எரித்தனர்.

முன்னதாக ஊழல் வழக்கில் கைதான சந்திரபாபு நாயுடு இருந்த சிறை முன்பு ராம்கோபால் வர்மா செல்ஃபி எடுத்துப் பகிர்ந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி பல சர்ச்சைகளை சந்தித்த இந்தப் படம் இந்த மாதம் 25ம் தேதி வெளியாகிறது. இதற்காகதான் இந்தப் படத்தில் நடித்த நடிகை மானசாவுடன் நைட் பார்ட்டி சென்றிருக்கிறார் ராம் கோபால் வர்மா. அங்கு அந்த நடிகையுடன் சிகரெட், கிளாஸூடன் நெருக்கமாக எடுத்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து ஜனசேனா கட்சி, இந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட நிஜ அரசியல்வாதிகளை அனைவரையும் டேக் செய்து படம் 25 அன்று வெளியாகிறது எனக் கூறியுள்ளார் ராம் கோபால் வர்மா. பட பளிச்சிட்டிக்காக இப்படியா செய்வார்கள் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அடேயப்பா... தேர்தல் விளம்பரத்திற்கு ஒரே வருடத்தில் ரூ.432 கோடி செலவழித்த பாஜக!

ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் ஷூட்... அரசு மருத்துவர் டிஸ்மிஸ்!

ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் குளறுபடி... கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

அட கொடுமையே... மருத்துவமனையில் நோயாளிகள் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மாணவர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in