'ஜெயிலர்2’ வேண்டாம் என நெல்சன் பதறினார்... நடிகர் வசந்த் ரவி தகவல்!

'ஜெயிலர்2’ வேண்டாம் என நெல்சன் பதறினார்...
நடிகர் வசந்த் ரவி தகவல்!

’ஜெயிலர்2’ குறித்தான செய்திகள் வெளியாகி வரும் சமயத்தில் அதை முன்பே கணித்தேன் என வசந்த் ரவி சொல்லி இருக்கிறார். மேலும், நெல்சன் ‘ஜெயிலர்2’ வேண்டாம் என்று சொன்னதாகவும் சொல்லி இருக்கிறார்.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘ஜெயிலர்’. படத்தில் அதீத வன்முறை இடம்பெற்றிருப்பதாகவும் திரைக்கதை சுமாராக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தது. இதனை அடுத்து இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதில் நெல்சன் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

படத்தின் முதல் பாகத்தில் ஹிட்டான ‘ஹூகும்...’ பாடலின் ‘ஹூகும்’ என்ற வார்த்தையையே ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான தலைப்பாக வைக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மகனாக நடித்திருந்த வசந்த் ரவி பேசியுள்ளார்.

நாளை மறுநாள் அவரது பிறந்தநாள் வருவதை ஒட்டி பத்திரிகையாளர்களை சந்திந்துப் பேசிய வசந்த் ரவி, “நான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன் ரஜினி சாரிடம் சென்று தான் அட்வைஸ் கேட்டேன். அவருடனேயே ‘ஜெயிலர்’ படத்தில் எனக்கு நடித்தது பெருமை. ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்.

நடிகர் வசந்த் ரவி
நடிகர் வசந்த் ரவி

’ஜெயிலர்2’ படத்துக்கான வேலைகள் நடக்கிறது என்ற விஷயத்தை எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அதை நெல்சன் சார்தான் சொல்ல வேண்டும். ‘ஜெயிலர்’ படத்தின் கதை, கிளைமேக்ஸ் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால், ‘ஜெயிலர்2’ என்ன கதை எப்படி இருக்கப் போகிறது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ‘ஜெயிலர்’ கிளைமேக்ஸ் ஷூட் செய்தபோதே நெல்சன் சாரிடம் ,“ பார்ட்2 -வுக்கான லீட் இருக்கு சார்” என்று சொன்னேன். ஆனால், "அப்படியா சொல்றீங்க? ஆனா, அதெல்லாம் வேண்டாம்” என்று அப்போது நெல்சன் சார் சொன்னார். ஆனால், அது நடக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!

இறுதிகட்டத்தில் சூடு பிடிக்கும் பிரச்சாரம்... தேர்தல் பத்திர விவகாரத்தை கையிலெடுக்கும் இந்தியா கூட்டணி

திமிர் பிடித்த கூட்டணி தலைவர்களை இந்தத் தேர்தல் தண்டிக்கும்... எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்!

தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!

மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in