விஜயின் கடைசிப் படத்தை இயக்க நான் ரெடி... கெளதம் வாசுதேவ் மேனன் ஓபன் டாக்!

கெளதம் வாசுதேவ் மேனன்,நடிகர் விஜய்
கெளதம் வாசுதேவ் மேனன்,நடிகர் விஜய்

நடிகர் விஜயின் கடைசிப் படத்தை இயக்கும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும் என்ற கேள்வி சஸ்பென்ஸாக தொடரும் நிலையில், அந்த வாய்ப்பு தனக்குக் கிடைத்தால் நிச்சயம் செய்வேன் என்று ஆர்வத்துடன் சொல்லி இருக்கிறார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘GOAT' படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து இன்னொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகும் விஜய் அதன்பிறகு முழுநேர அரசியலுக்குத் திரும்புகிறார்.

கெளதம் மேனன்
கெளதம் மேனன்

முழுநேர அரசியலில் பயணிப்பதற்கான பணிகளை இப்போதே தொடங்கிவிட்ட விஜய், ஏப்ரலில் கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்தவும் திட்டமிடுகிறார். விஜயின் இந்த பரபர அரசியல் செயல்பாடுகள் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தாலும் அவர் சினிமாவை விட்டு விலகுவது திரைத் துறையினர் மத்தியிலும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் ‘GOAT' படத்தை அடுத்து அவர் ஒப்பந்தமாகி இருக்கும் புதிய படத்தை யார் இயக்குகிறார் என்ற தகவல் இன்னும் சஸ்பென்ஸாகவே தொடர்கிறது. நேற்று நடந்த ‘ஜோஷ்வா இமை போல காக்க’ பட விழாவில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனிடம் விஜயின் கடைசிப் படத்தை நீங்கள் இயக்குவீர்களா என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பட்டென பதில் சொன்ன மேனன், “அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நிச்சயம் இயக்குவேன்” என்றார். நடிகை த்ரிஷா குறித்து முன்னாள் அதிமுக பிரமுகரான் தெரிவித்த அவதூறு கருத்து தொடர்பாக கேட்டதற்கு, “பெண்களைப் பற்றி யார் அவதூறாகப் பேசியிருந்தாலும் அது தவறுதான்” என்று சொன்னவர், ”சிம்புவும் தயாரிப்புத் தரப்பும் பிரச்சினைகள் இன்றி ஒன்று சேர்ந்தால் நிச்சயம் ’வெந்து தணிந்தது காடு2’ எடுப்பேன்” என்றும் சொன்னார்.

இதையும் வாசிக்கலாமே...


நாளை மாசி மகம்: இல்லத்தில் தனம் பெருக இதை தானம் பண்ணுங்க!

விடாது துரத்திய விபத்து... தெலங்கானாவில் பெண் எம்எல்ஏ பலி!

அதிகாலையில் அதிர்ச்சி... முன்னாள் முதல்வர் காலமானார்!

லாட்டரியில் ரூ.1,00,00,000 பரிசு... பழநிக்கு பாதயாத்திரை சென்ற கேரள பக்தருக்கு அதிர்ஷ்டம்!

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in