இளையராஜாவை தாஜா செய்து படம் எடுத்தேன்... இயக்குநர் பாக்யராஜ் சுவாரஸ்யம்!

ராமானுஜம் நூற்றாண்டு விழாவில்...
ராமானுஜம் நூற்றாண்டு விழாவில்...

இசையமைப்பாளர் இளையராஜாவை தாஜா செய்து சமாளித்து தனது ஒரு படத்துக்கு இசையமைக்க வைத்ததாக இயக்குநர் பாக்யராஜ் கூறியுள்ளார்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிறுவனரும், திரை உலகின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான மறைந்த டி.இராமானுஜத்தின் நூற்றாண்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், நடிகர் கமல்ஹாசன், நாசர் உட்பட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர், நடிகர் பாக்யராஜ் பேசும்போது சில சுவாரஸ்ய சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

கங்கை அமரன் - பாக்கியராஜ்
கங்கை அமரன் - பாக்கியராஜ்

அந்த நிகழ்ச்சியில் பாக்யராஜ், “கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் உயர்ந்த மனிதர் ராமானுஜம். ’புன்னகை அரசி’ என்றால் கே.ஆர்.விஜயா என்று சொல்வதைப் போல, ’புன்னகை அரச’னாக டி.ராமானுஜத்தை நான் பார்த்திருக்கிறேன். நான் திரைத் துறைக்கு வரும் முன்பே என் திறமையை நம்பியவர். சினிமாவுக்கு பல சேவைகளை செய்தவருக்கு இப்படியான விழா எடுப்பது சிறப்பானது.

வாக்குக் கொடுப்பது பெரிதல்ல. ஆனால், அதைக் காப்பாற்ற நினைக்கும் போது வேறு சில சிக்கல்களும் வந்துவிடுகிறது. இப்படித்தான் ‘ஒரு பெரிய படம் வரும்போது வாய்ப்புத் தருகிறேன்’ என இசையமைப்பாளர் கங்கை அமரனிடம் வாக்குக் கொடுத்திருந்தேன். பின்னர், ஏவிஎம் தயாரிப்பில் ‘முந்தானை முடிச்சு’ படம் கமிட் ஆனதும், கங்கை அமரனை அந்தப் படத்திற்கு இசையமைக்கச் சொன்னேன். ஆனால், தயாரிப்பாளர்களோ படத்திற்கு இளையராஜா இசை வேண்டும் என்றார்கள். இதனால், இளையராஜாவிடம் சென்றோம்.

பாக்யராஜ்
பாக்யராஜ்

ஆனால், அவர் முதலில் ஒத்துக் கொள்ளாமல் அடம்பிடித்தார். ‘முதலில் நீங்கள் என்னை கூப்பிடவில்லை. கங்கை அமரனைத் தானே கூப்பிட்டீங்க!’ எனபதுதான் அவர் வருத்தம். பின்பு, அவரை தாஜா செய்து சமாளித்து அந்தப் படத்துக்கு இசையமைக்க வைத்தோம்.” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


ஐபிஎல் சூதாட்ட கும்பல் சிக்கியது: இருவர் கைது; ரூ.2.47 லட்சம் பறிமுதல்!

வாக்களித்துவிட்டு ஊர் திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்... விபத்தில் 6 பேர் பலி!

ஒருதலைக் காதலால் கர்நாடகாவில் அடுத்த பயங்கரம்... வீடு புகுந்து இளம்பெண் குத்திக் கொலை!

காதலனுக்காக வீட்டின் உரிமையாளரை கொலை செய்த இளம்பெண்... பெங்களூருவில் பரபரப்பு!

அதிர்ச்சி... நடிகை ராக்கி சாவந்த் மருத்துவமனையில் அனுமதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in