மிஷ்கின் ஒரு ஓநாய்... மேடையை அதிரவிட்ட இயக்குநர் பாலா!

இயக்குநர் பாலா
இயக்குநர் பாலா

’டெவில்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கினை ஓநாய் என குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் பாலா.

இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் இயக்குநர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகும் படம் ‘டெவில்’. இதன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பாலா, அருண் மாதேஸ்வரன் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் பாலா பேசும் போது, “நான் என் படத்தின் பாடல் ஒலிப்பதிவிற்காக இளையராஜாவிடம் போயிருந்தேன். அப்பொழுது இளையராஜா மிஷ்கினைப் பற்றி சொன்ன ஒரு விசயம் எனக்கு ஞாபகம் வருகிறது.

அப்பொழுதெல்லாம் எனக்கு மிஷ்கின் யார் என்றே தெரியாது. அவர் எடுத்த படத்தைப் பற்றியும் தெரியாது. ஒரு ஷார்ட்ஸ் அதற்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஷூ மற்றும் டீ-சர்ட் போட்டுக் கொண்டு, துறுதுறுவென அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருந்தார் ஒருவர்.

மிஷ்கின், பாலா...
மிஷ்கின், பாலா...

அவர் போனதும், அவர் யார் என்று கேட்டேன். அதற்கு இளையராஜா, ’அவன் தான் மிஷ்கின். அவனை சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதே அவன் மிகப்பெரிய அறிவாளி என்று கூறினார். அவனைப் பார்க்கும் போது ஒரு டெவில் போலத்தான் இருக்கிறான். நான் என்னுடைய போனில் அவன் நம்பரைக் கூட ஓநாய் (Wolf) என்று தான் பதிவு செய்து வைத்துள்ளேன்.

’டெவில்’ படக்குழு...
’டெவில்’ படக்குழு...

’வணங்கான்’ படத்தில் உதவி இயக்குநராக இல்லை, இயக்குநராகவே நடித்துள்ளான். அவன் நடிக்கின்ற காட்சியை அவனையே இயக்கச் சொல்லிவிட்டேன். அது சிறப்பாக வந்திருக்கிறது என்று ஓகே சொல்லிவிட்டேன். ஆனால் மிஷ்கின், நீங்கள் மீண்டும் ஒரு முறை ஓகே வா என்று பார்த்து சொல்லுங்கள் என்றான். அதில் உள்ள ஒரு சிறுபிழையை நான் கவனிக்காமல் விட்டுவிட, மிஷ்கின் தான் அதைப் பார்த்து சொன்னான். நாம் எப்படி அதை தவறவிட்டோம் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். உண்மையாகவே மிஷ்கினுக்கு முன்னால் நான் ஒன்றுமே இல்லை” என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in