சோகம்... இயக்குநர் ஆர்த்தி குமார் காலமானார்!

இயக்குநர் ஆர்த்தி குமார்
இயக்குநர் ஆர்த்தி குமார்

பிரபல இயக்குநர், நடிகர் ஆர்த்தி குமார் காலமாகி இருப்பது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்த்திகுமார் இயக்கிய சவுண்ட் பார்ட்டி
ஆர்த்திகுமார் இயக்கிய சவுண்ட் பார்ட்டி

நெல்லை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இயக்குநர் ஆர்த்தி குமார். இவரது இயற்பெயர் சுரேஷ் குமார். திரைத்துறைக்குள் நுழைந்த பின்பு இவர் தனது பெயரை ஆர்த்தி குமார் என மாற்றிக் கொண்டார். இவர் நேற்று முன்தினம் பாளை ஹை கிரவுண்ட் மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் தொடர் சிகிச்சை கொடுத்த போதிலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இரவு எட்டு மணிக்கு உயிரிழந்தார். அவர் உடலில் என்ன பிரச்சினைகள் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. நேற்று போஸ்ட் மார்ட்டம் முடிந்து அவரது உடல் இன்று சென்னை கொண்டு வரப்படுகிறது. அதற்குப் பின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’பெரியார்’ படத்தில்...
’பெரியார்’ படத்தில்...

இயக்குநராக நடிகர் சத்யராஜை வைத்து ’அழகேசன்’, ’சவுண்ட் பார்ட்டி’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் பல இயக்குநர்களிடம் கதாசிரியராகவும் பணியாற்றினார்.

இயக்கம் தவிர்த்து, ஞான ராஜசேகரன் இயக்கிய ' பெரியார்' படத்தில் ராஜாஜியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும், ரசிகர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!

முன்கூட்டியே நடக்கிறது பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்... தேர்தலையொட்டி அரசு அறிவிப்பு!

பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம்... மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; தீப்பிழம்பான நகரம்... 6 பேர் பலி, 60 பேர் படுகாயம்!

டெஸ்ட் போட்டி.... இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in