ரசிகரின் செல்ஃபோனைத் தட்டிவிட்ட தீபிகா படுகோனே... வெடித்த சர்ச்சை!

Actress  Deepika Padukone
தீபிகா படுகோனே

விமான நிலையத்தில், தன்னை செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ரசிகரின் செல்போனை நடிகை தீபிகா படுகோனே, தட்டிவிட முயன்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விவாகரத்து இல்லை:

நடிகர்கள் தீபிகா படுகோனே- ரன்வீர் இருவரும் தங்கள் முதல் குழந்தையை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இதற்கிடையில் தனது திருமண புகைப்படங்களை சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கி விவாகரத்து சர்ச்சையை கிளப்பினார் ரன்வீர். ஆனால், தீபிகாவுடன் விவாகரத்து இல்லை என்பதையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெளிவுப்படுத்தி இருந்தார்.

Ranveer Singh and Deepika Padukone
ரன்வீர் சிங் - மனைவி தீபிகா படுகோன் உடன்

புதிய சர்ச்சை

இந்த சர்ச்சைகள் எல்லாம் ஓயும் முன்பு இப்போது இந்த ஜோடி பற்றிய அடுத்த சர்ச்சை கிளம்பியிருக்கிறது. கர்ப்ப காலத்தில் மனைவி தீபிகாவை ரிலாக்ஸ் செய்ய அவரை பேபி மூன் அழைத்து சென்றிருக்கிறார் ரன்வீர். அதை முடித்துவிட்டு மும்பை திரும்பியிருக்கிறது இந்த ஜோடி.

அப்போது மும்பை ஏர்போர்ட்டில் இவர்களை அங்கிருந்த ரசிகர்கள் சூழ்ந்து புகைப்படங்கள் வீடியோக்கள் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதனைப் பார்த்த தீபிகா, தன்னைப் வீடியோ எடுத்த ரசிகர் ஒருவரின் செல்ஃபோனை தன் கையால் மறைத்து தட்டிவிட முயன்றிருக்கிறார். இந்த வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதைப் பார்த்தப் பலரும் 'ரசிகர்கள் இல்லாமல் நடிகர்கள் இல்லை. அப்படி இருக்கும் போது, தீபிகா இப்படி நடந்து கொள்வது முறையல்ல’ என்றும், ‘உண்மையில் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா?’ என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இன்னும் சிலர் தீபிகாவுக்கு ஆதரவாக, ‘அவர் விளையாட்டாக கை வைத்து மறைத்திருக்கிறார். அதைப் பெரிது படுத்த வேண்டாம்’ என்றும், ‘அவர் கர்ப்பத்தை அறிவிக்கும் முன்பாக அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று செய்தி பரப்பினீர்கள்! அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தப் பின்பு, அவர் உண்மையாகவே கர்ப்பமாக இருக்கிறாரா என்று கேட்கிறீர்கள்! விநோதம்’ என்றும் கூறி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

வெயில் காலங்களுக்கு எனர்ஜி தரும் சூப்பர் பானங்கள்!

ஒரே பள்ளியில் பயின்ற 13 இரட்டையர்களும் பத்தாம் வகுப்பில் பாஸ்!

லாரியின் உள்ளே ரகசிய அறை வைத்து எடுத்துச் சென்ற ரூ.8 கோடி... ஆந்திராவில் பரபரப்பு!

சென்னை வந்தும் சூர்யாவின் பெற்றோரை பார்க்காத ஜோதிகா... பற்றி எரியும் குடும்பப் பிரச்சினை!

இளையராஜா தன் வழக்கு மூலம் புது டிரெண்டை உருவாக்குகிறார்... வழக்கறிஞர் அதிரடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in