
வெளியே கேள்விப்பட்டது உண்மைதான் என மணி பிக் பாஸ் வீட்டில் பேசியுள்ளார்.
பிக் பாஸ்7 வீட்டில் போட்டியாளர்களாக மணி, ரவீனா இருவரும் உள்ளனர். வெளியில் இருக்கும் போதே இவர்கள் இருவரும் ஒன்றாக நடனம் ஆடுவது, வெளிநாடு செல்வது என இருந்து வந்ததால் இருவரும் காதலிக்கிறார்களா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் இதனை விசித்ரா, ஐஷு, பிரதீப் ஆகியோர் நேரடியாக அவர்களிடம் கேட்டனர்.
இதற்கு இருவரும், ’நாங்கள் காதலர்கள் இல்லை, நண்பர்கள் தான். இதுவரை நாங்க காதலிப்பது குறித்து யோசிக்கவில்லை. நீங்களே பேசி காதலை வரவெச்சுடுவீங்க போல’ எனக்கூறினர்.
ஆனால் தற்போது ஐஷு மணியிடம் மீண்டும் மீண்டும் இது பற்றிக் கேட்க, ரவீனாவுடன் உள்ள உறவு குறித்து கேட்க, வேறு வழியில்லாமல் ரவீனாவைக் காதலிக்கும் தகவலை கூறி உள்ளார்.
இதுபற்றி ரவீனாவிடம், ’உன்னைக் கேட்காமல் நான் ஐஷுவிடம் கூறி விட்டேன்’ எனச் சொல்ல, அவர் செம டென்ஷனாகினார். ‘பர்சனல் பற்றி யாரிடமும் சொல்லாதே என சொல்லியும் ஏன் சொன்ன? உங்க வீடு மாதிரி இல்ல எங்க வீடு’ என ரவீனா பேசியிருக்கிறார். சமீபத்தில் ரவீனாவின் அம்மா ரவீனா-மணி காதலிக்கவில்லை எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு! மாணவர்கள் உற்சாகம்!
திருப்பதியில் பேத்தியுடன், துர்கா ஸ்டாலின் தரிசனம்!
கடும் போக்குவரத்து நெரிசல்... படப்பிடிப்புக்கு மெட்ரோவில் பயணித்த பிரபல நடிகர்!
அதிர்ச்சி... தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிக்கு சரமாரி வெட்டு!
நான் ஹெல்மெட் திருடவில்லை; உயிரை மாய்த்துக்கொள்வேன்... சிறப்பு எஸ்ஐ கதறல்!