தன்னுடைய பயோபிக்கை தானே இயக்கி, அதில் நடிக்கவும் போகிறேன் என கிரிக்கெட்டர் யுவராஜ் சிங் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார். யுவராஜின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில், “இது ஏப்ரல் ஃபூல் பதிவா?” என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
சினிமாவில் சுயசரிதை படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் உண்டு. குறிப்பாக, விளையாட்டு வீரர்களின் பயோபிக்கில் போராட்டம், வலி, அவமானம் அதன் பின்னான வெற்றி என பல உணர்வுகள் கொட்டிக் கிடக்கும். நிஜத்தில் தாங்கள் பார்த்து ரசித்த விளையாட்டு வீரர்களின் கதைகளை திரையில் ரசிகர்கள் கொண்டாடிய வரலாறும் இங்கு உண்டு.
கிரிக்கெட் ஜாம்பவான்களான எம்.எஸ். தோனி, கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் போன்றோர்களின் பயோபிக் கதைகளை இதற்கு முன்பு உதாரணமாகச் சொல்லலாம்.
அப்படி கிரிக்கெட்டர் யுவராஜ் சிங் தன்னுடைய பயோபிக் கதையை தானே எழுதி, இயக்கி, தயாரித்து நடிக்கவும் போவதாக கூறியுள்ளார். அடுத்து வரும் நாட்களில் அதற்கான பணிகளைத் தொடங்கப் போவதாகவும் இன்னும் இரண்டு வருடங்களில் படத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார். படத்திற்கான அப்டேட்ஸ் அடுத்தடுத்து வரும் எனவும் தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து சொல்லி வந்தாலும், இது ஏப்ரல் ஃபூல் பதிவில்லையே...? எனத் தங்கள் சந்தேகத்தையும் வெளிப்படுத்தத் தவறவில்லை.
இந்திய கிரிக்கெட்டில் வரலாற்றில் பல பெருமை மிகு தருணங்களுக்கு சொந்தக்காரர் யுவராஜ் சிங். டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் விளாசி சாதனைப் படைத்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்றதற்கு, யுவராஜ் சிங்கின் பங்களிப்பு முக்கிய காரணம். இவரது தனிப்பட்ட வாழ்க்கையும் பல சோதனைகளைக் கொண்டது.
குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து போராடி மீண்டு வந்தார். முன்பு தன்னுடைய பயோபிக்கில் ரன்பீர் கபூர் நடித்தால் நன்றாக இருக்கும் என யுவராஜ் சிங் விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?
உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!
பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!
தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!