களவு போயிடுச்சுங்க என் கட்சி லெட்டர் பேட்... போலீஸாரை கதற வைத்த மன்சூர் அலிகான்!

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

இந்திய ஜனநாயக புலிகள் கட்சி அலுவலகத்தில் இருந்த லேப்டாப், லெட்டர் பேட், ரப்பர் ஸ்டாம்ப் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்ற பொதுச்செயலாளர் கண்ணதாசன் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மன்சூர் அலிகான் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகான்

சினிமா, அரசியல் என இரண்டு தளங்களிலும் இயங்கி வருபவர் மன்சூர் அலிகான். தான் பேசும் அதிரடி கருத்துகளால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கியும் வருகிறார். சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து அவர் பேசிய கருத்து கடும் விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், கடந்த மாதம் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் மன்சூர் அலிகான் கலந்துக் கொண்டார். தன்னிச்சையாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறி கடந்த 15-ம் தேதி இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்பட்டார்.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

"தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம், கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் தனக்கு மட்டுமே இருக்கிறது. அதை மீறி மன்சூர்அலிகான் செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்" என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் குற்றம் கூறியிருந்தார். இதையடுத்து கண்ணதாசன் கட்சியின் பொதுச்செயலாளரே கிடையாது என்றும், கட்சி அலுவலகத்தில் உள்ள ரப்பர் ஸ்டாம்ப், லேப்டாப் உள்ளிட்டவற்றை அவர் திருடிச் சென்றுவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினார் மன்சூர் அலிகான்.

இந்நிலையில், கட்சி அலுவலகத்தில் இருந்த லெட்டர் பேட், ரப்பர் ஸ்டாம்ப், லேப்டாப் உள்ளிட்டவற்றை கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் திருடி சென்றுவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மன்சூர்அலிகான், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார். இதையடுத்து இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஷாக்... நடுக்கடலில் விழுந்து நொறுங்கிய இந்திய கடற்படை விமானம்!

விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை... பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

நள்ளிரவு ஒரு மணிக்கு பொங்கல்...  50 ஆடுகளை வெட்டி 3,000 ஆண்களுக்கு விருந்து!

பிரேமலதா விஜயகாந்த் மீது பாய்ந்தது வழக்கு...தேர்தல் விதிமுறை மீறியதாக அதிரடி!

வனவிலங்குகளுடன் செல்ஃபி எடுக்கப் போறீங்களா?... 7 ஆண்டு சிறை உறுதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in