நீதித்துறையை அவமரியாதை செய்யாதீர்கள்... நடிகர் அக்‌ஷய்குமார் படத்தின் மீது பாய்ந்த வழக்கு!

‘ஜாலி எல்எல்பி 3’
‘ஜாலி எல்எல்பி 3’

நடிகர் அக்‌ஷ்ய குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜாலி எல்எல்பி 3' திரைப்படம் மீது வழக்குப் பாய்ந்துள்ளது. இந்தப் படத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளை கேலி செய்ததாக படத்தின் தயாரிப்பாளர்கள் மீது அஜ்மீர் மாவட்ட பார் அசோசியேஷன் தலைவர் சந்திரபான் சிங் ரத்தோட் புகார் அளித்துள்ளார்.

நடிகர்கள் அக்‌ஷய் குமார், அர்ஷத் வர்சி உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜாலி எல்எல்பி 3'. இந்தப் படத்திற்குதான் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. அதாவது, இந்தத் திரைப்படத்திற்கு எதிராக அஜ்மீர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் நீதித்துறை நேர்மையைக் குலைக்கும் வகையில் இருப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

‘ஜாலி எல்எல்பி 3’ படத்தில்
‘ஜாலி எல்எல்பி 3’ படத்தில்

அஜ்மீர் மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் சந்திரபான் சிங் ரத்தோட், சிவில் நீதிபதி அஜ்மீர் நார்த் நீதிமன்றத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர்கள் மீது அவர் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரில், படப்பிடிப்பை தயாரிப்பாளர்கள் உடனே நிறுத்த வேண்டும் என்று புகாரில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக நீதிமன்றம் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சந்திரபான் கூறியிருப்பதாவது, “நம் நாட்டின் நீதித்துறையின் கண்ணியம் மற்றும் மாண்பை இந்தத் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் சிறிதும் மதிக்கவில்லை என்று தெரிகிறது.

‘ஜாலி எல்எல்பி 3’
‘ஜாலி எல்எல்பி 3’

‘ஜாலி எல்எல்பி 3’ படத்தின் படப்பிடிப்பு அஜ்மீரின் டிஆர்எம் அலுவலகம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் பகுதிகளில் தொடர்ந்து பல நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது கூட, படத்தின் நடிகர்கள் நீதிபதிகள் உட்பட நீதித்துறையின் இமேஜ், கௌரவம் மற்றும் கண்ணியம் பற்றி தீவிரமாக இருப்பதாகத் தெரியவில்லை” என்று கூறினார்.

மேலும், “படத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளின் சித்தரிப்பு நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளுடன் ஒப்பிடும்போது பொருத்தமற்றதாகத் தெரிகிறது. அதாவது வழக்கறிஞரை எட்டி உதைப்பது, குச்சியால் துரத்துவது, நீதிபதி குட்கா சாப்பிடுவது, பணப் பரிவர்த்தனை போன்ற காட்சிகள் நீதிமன்றம், நீதித்துறை, வழக்கறிஞர்கள், நீதிபதிகளின் கண்ணியத்துக்கும் கௌரவத்துக்கும் ஏற்ற வகையில் இல்லை” என்று அவர் கூறினார்

படத்தின் ஷூட்டிங்கின் போதே இந்த விஷயங்களை கவனித்து தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!

ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

அனுபவம் பத்தாது... அரசியல் வாரிசாக அறிவித்தவரை அதிரடியாக நீக்கிய மாயாவதி

பரபரப்பு... பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in