மன்சூர் அலிகான் மீது வழக்கு... தேசிய மகளிர் ஆணையம் தமிழக டிஜிபிக்கு உத்தரவு!

மன்சூர்- த்ரிஷா
மன்சூர்- த்ரிஷா

நடிகை த்ரிஷா குறித்து பொதுவெளியில் அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

’லியோ’ திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவை கற்பழிக்கும்படியான காட்சி எதிர்பார்த்ததாகவும் ஆனால், அது நடக்கவில்லை எனவும் மன்சூர் அலிகான் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியுள்ள வீடியோ பரபரப்பைக் கிளப்பியது. இதனை வன்மையாகக் கண்டித்த நடிகை த்ரிஷா, இனி அவருடன் இணைந்து படங்கள் நடிக்கமாட்டேன் எனவும் அறிவித்தார். ‘லியோ’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகைகள் மாளவிகா மோகனன், ரோஜா, குஷ்பு எனப் பலரும் மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரான குஷ்பு, நடிகை த்ரிஷா விவகாரத்தில் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நான் ஏற்கெனவே மன்சூர் அலிகான் பேசிய கருத்துகள் குறித்து ஆணையத்தின் மூத்த உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளேன்.

தேசிய மகளிர் ஆணையத்தின் பதிவு...
தேசிய மகளிர் ஆணையத்தின் பதிவு...

அவரின் மீது மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். இதுபோன்ற இழிவான சிந்தனையுடன் உள்ள யாரும் தப்பிக்க முடியாது. இந்த நேரத்தில் மன்சூர் அலிகான் இழிவாகப் பேசிய த்ரிஷா மற்றும் மற்ற பெண்களுக்கு ஆதரவாக நான் நிற்கிறேன்’ எனக் கூறினார்.

இந்த நிலையில், சட்டப்பிரிவு 509ன் கீழ் மற்றும் இதர தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசியதற்காக மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பெண்கள் மீது நிகழ்த்தப்படும் இதுபோன்ற வன்முறைகளுக்கும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


HBD Shalini Ajith | அஜித் காட்டிய அக்கறை... வாழ்க்கையை ‘அமர்க்களமாய்’ மாற்றிய சினிமா!

துறைமுகத்தில் 60 படகுகள் எரிந்து நாசம்; கதறும் மீனவர்கள்!

1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டுக்கள்... அத்தாளநல்லூர் ஆய்வில் கண்டுபிடிப்பு!

ஐசியுவில் விஜயகாந்த்... என்ன சொல்கிறது மருத்துவமனை நிர்வாகம்?

பிக் பாஸில் மீண்டும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி... யார் அந்த மூன்று பேர்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in