அஜித் படம் வெளியாவதில் சிக்கல்? கலக்கத்தில் ரசிகர்கள்!

அஜித் படம் வெளியாவதில் சிக்கல்? கலக்கத்தில் ரசிகர்கள்!

நடிகர் அஜித்தின் பிறந்தநாள் மே 1 அன்று கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அவர் நடித்த ‘மங்காத்தா’ படம் ரீ-ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதில் சிக்கல் எழுந்துள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை கலக்கமடையச் செய்துள்ளது.

ரீ-ரிலீஸ் கலாச்சாரத்தை ரசிகர்கள் பெரிதும் விரும்புகின்றனர் என்பதற்கு சான்றாக இருக்கிறது சமீபத்திய ரீ-ரிலீஸ் படங்களின் வசூல். படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன நிலையிலும், பலமுறை தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பானதை ரசித்த ரசிகர்கள், திரையரங்குகளிலும் ‘கில்லி’ ரீ-ரிலீஸைக் கொண்டாடி வருகின்றனர். படம் வெளியான சில நாட்களிலேயே ரூ. 12 கோடி வசூலைக் கடந்திருக்கிறது கோலிவுட்டை ஆச்சரியப்படுத்தியுள்ளது. புதுப்படங்களுக்கு இணையாக ரீ-ரிலீஸ் படங்களின் வசூலும் மாஸ் காட்டி வருகிறது.

’மங்காத்தா’ படத்தில் அஜித்...
’மங்காத்தா’ படத்தில் அஜித்...

இந்த வரிசையில் நடிகர் அஜித்தின் பிறந்தநாளுக்காக மே 1 அன்று அவர் நடித்த ’மங்காத்தா’ படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த 2011ல் வெளியான இந்தப் படத்தில் நீண்ட நாட்கள் கழித்து நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்தார் நடிகர் அஜித்.

அர்ஜூன், த்ரிஷா, அஞ்சலி உள்ளிட்டப் பலர் நடித்திருந்த இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் பெரும் பலமாக அமைந்திருந்தது. ‘கில்லி’ ரீ-ரிலீஸ் வசூலில் கெத்து காட்ட, ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸுக்கு அஜித் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால், இப்போது ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ் ஆகுமா என்கிற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

’மங்காத்தா’ படத்தை தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. கடந்த சில மாதங்களாகவே மூளையில் ரத்தகுழாய் அடைப்பு ஏற்பட்டு கோமா வரை பாதிக்கப்பட்டிருந்த தயாநிதி அழகிரி, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி, தற்போதும் சிகிச்சையில் இருக்கிறார். இந்நேரத்தில் ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ் கொண்டாட்டங்கள் அவசியமா?’ என்ற பேச்சும் கிளம்பியிருக்கிறது.

இதனால், மங்காத்தா ரீ-ரிலீஸ் சந்தேகம் தான் என்கிறார்கள். ரீ-ரிலீஸ் வசூலில் போட்டி, அஜித்தை திரையில் மீண்டும் பார்த்து ரசிக்க வேண்டும் என காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...


+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in