கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் ‘மனுஷி’... வெளியானது டிரைலர்!

கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் ‘மனுஷி’... வெளியானது டிரைலர்!

கோபி நயினார் இயக்கத்தில், வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள 'மனுசி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

கிராஸ் ரூட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் வெற்றிமாறன், ‘கொடி’, ‘அண்ணனுக்கு ஜே’, 'அனல் மேலே பனித்துளி' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். அவர் இப்போது சூரி ஹீரோவாக நடிக்கும் ‘கருடன்’ படத்தை தயாரித்து வருகிறார்.

இதனிடையே ‘அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில், இன்று மாலை விஜய் சேதுபதி 'மனுசி' படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார். கோபி நயினாரும் வெற்றிமாறனும் ஒரே படத்தில் இணைந்துள்ளதாலும் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

நயன்தாராவின் ‘அறம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கோபி நயினார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘அறம்’ படத்தை போலவே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவர் ‘மனுஷி’ படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் பிரதான வேடத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் நாசர், ஹிக்கிம் ஷா, தமிழ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு... மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணி குடும்பம்... சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

அசுரத்தனமான உழைப்பு... விக்ரம் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ’தங்கலான்’ வீடியோ!

40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயற்சி... காருடன் ரூ.2.25 லட்சத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in