இயக்குநர் அவதாரம் எடுத்த சின்னத்திரை தொகுப்பாளர்!

தொகுப்பாளர் ஆடம்ஸ்
தொகுப்பாளர் ஆடம்ஸ்

சின்னத்திரை நடிகர்கள் பெரும்பாலும் பெரிய திரைக்கு வந்து நடிக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். அப்படி தொகுப்பாளராக இருந்து நடிகராகி இப்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார் ஆடம்ஸ்.

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக வலம் வந்தவர் ஆடம்ஸ். அங்கு கிடைத்த பிரபல்யம் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார். ‘தென்றல்’, ‘முந்தானை முடிச்சு’ போன்ற பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். சீரியல்களுக்கு அடுத்து படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் இப்பொழுது இயக்குநராக புது அவதாரம் எடுத்துள்ளார்.

ஆடம்ஸ் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள படத்திற்கு ‘கேன்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. ரொமாண்டிக் த்ரில்லர் ஜானரை சேர்ந்த இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்போது வெளியாகியுள்ளது.

எட்டு நாட்களில் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட கதை இது. இந்தப் படத்தில் கோவை சரளா, கலையரசன், விடிவி கணேஷ், ரோபோ ஷங்கர், அகசரா, ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...    

அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!

பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!

தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in