'கூலி' டைட்டில் டீசரில் தெறிக்கவிடும் ரஜினியின் பழைய பாடல்!

ரஜினி
ரஜினி HR Ferncrystal

லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் இணையும் 'கூலி' படத்தின் தலைப்பு அறிமுக வீடியோவில், 'சம்போ சிவ சம்போ' எனும் ரஜினியின் பழைய பாடலும், ராமராஜனின் 'செண்பகமே' பாடலும் இடம்பெற்று சிறப்பு கவனத்தை பெற்றுள்ளன.

தமிழ் சினிமாவில் 'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அந்தப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றதால், அடுத்து முன்னணி நடிகரான கார்த்தி உடன் 'கைதி' படத்தில் இணைந்தார். அந்தப்படம் ரசிகர்களுக்கு முழு ஆக்சன் விருந்தையும் படைத்தது. அடுத்து தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியான விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கினார் லோகேஷ். இந்தப்படமும் பெரிய வசூலை அள்ளியதால், அடுத்து கமல்ஹாசனை இயக்கினார். அந்தப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் மழை பொழிந்தது, அதன் மூலம் இந்திய அளவில் முன்னணி இயக்குநராக உயர்ந்தார் லோகேஷ். அடுத்து விஜயை வைத்து மீண்டும் லியோ படத்தை இயக்கினார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் லோகேஷ்.

கூலி டைட்டில் டீசர்
கூலி டைட்டில் டீசர்

ரஜினிகாந்த் உடன் இணையும் புதிய படத்திற்கு 'கூலி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் டீசர், இன்று மாலை 6 மணிக்கு வெளியாகி வைரலாகி வருகிறது. தங்க குடோனுக்குள் அதிரடியாக ரஜினி புகுந்து அடியாட்களை பறக்கவிடும் காட்சியை அதிரடியாக படமாக்கியுள்ளார் லோகேஷ். இதில் லோகேஷ் கனகராஜ் டச்-யும், ரஜினிகாந்த் ஸ்டைலும் மேஜிக் செய்திருக்கின்றன. முக்கியமாக இந்த டீசர் வீடியோவில், இரண்டு பழைய பாடல்களை பயன்படுத்தியுள்ளார். எப்போதும் தனது படங்களில் பழையை பாடல்களை பயன்படுத்தி, அந்த பாடல்களுக்கு புத்துயிர் அளித்து வருகிறார் லோகேஷ். இந்த டைட்டில் டீசரில், பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல் நடிப்பில் வெளியான நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெற்ற 'சம்போ சிவ சம்போ' பாடல் வரிகளையும், கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற 'செண்பகமே செண்பகமே' பாடலை பயன்படுத்தியுள்ளார்.

அதில், அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்

தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு

அப்பாவி என்பார்க ள் தப்பாக நினைக்காதே

எப்பாதை போனாலும் இன்பத்தைத் தள்ளாதே

கல்லை நீ தின்றாலும் செறிக்கின்ற நாளின்று

காலங்கள் போனாலே தின்னாதே என்பார்கள்

மதுவுண்டு பெண்ணுண்டு சோறுண்டு சுகமுண்டு மனமுண்டு

என்றாலே சொர்க்கத்தில் இடம் உண்டு...

என்று சம்போ சிவ சம்போ' பாடல் வரிகளை, அடியாட்களை துவம்சம் செய்தபடியே வசனமாக கர்ஜித்துள்ளார் ரஜினி. இறுதியில் கூலாக தங்க கட்டிகளுக்கு மேல் படுத்துக் கொண்டு 'செண்பகமே செண்பகமே' பாடலை பாடி வில்லன் உடன் ரஜினி போனில் பேசுவது உடன் டைட்டில் டீசர் முடிகிறது. எப்போதுமே படங்களில் தான் பழைய பாடல்களை பயன்படுத்தும் லோகேஷ், ரஜின் படத்தின் டைட்டில் டீசரிலே பழைய பாடல்களை பயன்படுத்தி ரசிகர்களுக்கு விருந்தை வைத்துள்ளார். தற்போது 'சம்போ சிவ சம்போ' பாடலும், அந்த பாடல் வரிகளை ரஜினி பேசும் காட்சியும், சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...


+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in