யார் இந்த நடிகை ரஞ்சனா நாச்சியார்?

நடிகை ரஞ்சனா நாச்சியார்
நடிகை ரஞ்சனா நாச்சியார்

அரசு பேருந்தில் மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணம் செய்ததாக மாணவர்களை அடித்து கீழே இறக்கி பேருந்துநர், நடந்துநர்களிடம் ஒருமையிலும் தகாத வார்த்தையிலும் திட்டி சர்ச்சையை ஏற்படுத்தினார் நடிகை ரஞ்சனா. அவர் மீது போக்குவரத்து ஊழியர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ் மாங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து இன்று காலை ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டார். இதுபோன்று இவர் பரபரப்பை ஏற்படுத்துவது முதல்முறையல்ல.

இயக்குநர் பாலாவின் அண்ணன் மகளான 38 வயதாகக்கூடிய ரஞ்சனா நாச்சியார் நடிகை மட்டுமல்ல வழக்கறிஞரும் கூட. இதுமட்டுமல்லாது, பாஜகவில் கலை மற்றும் கலாச்சார பிரிவின் செயலாளராக இருக்கிறார். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் சுரேஷ் குமாருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சனா அவர் மாமனார் மீது சரவணவேல் மீது பாலியல் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

நடிகை என்பதைக் கூறியே தன் மாமனார் பலமுறை நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் இதுகுறித்து காவல்துறையில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி அதிர வைத்தார்.

நடிகை ரஞ்சனா நாச்சியார்
நடிகை ரஞ்சனா நாச்சியார்

இதன் பிறகு அவரது புகாரின் பேரில் மாமனார், மாமியாரை விசாரிக்க முயன்ற போது அவர்கள் தலைமறைவாகி இருந்தனர். மேலும் ரஞ்சனாவின் கணவருக்கு மனநிலை சரியில்லை என்றும் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் தற்போது மனநிலை சிகிச்சை பெற்று வருவதாகவும் ரஞ்சனா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in