விவாகரத்துக்கு தயாராகும் ஐஸ்வர்யா ராய்?

விவாகரத்துக்கு தயாராகும் ஐஸ்வர்யா ராய்?

ஐஸ்வர்யா ராயின் வாழ்க்கையில் உறவுகளை விட நண்பர்களே அதிகளவு கரம் கொடுத்திருக்கிறார்கள். இதை ஐஸ்வர்யா ராய் எப்போதும் பொதுவெளியில் சொல்லத் தயங்கியதில்லை. அவர் திரையுலகத்துக்கு வரவேண்டும் என்று எப்போதுமே நினைத்ததில்லை. உடன் பயின்ற கல்லூரித் தோழிகள், கல்லூரி நிகழ்வில் எடுத்துகொண்ட குரூப் போட்டோ ஒன்றை அன்றைக்குப் பிரபலமாக இருந்த சமூக ஊடகமான ஆர்குட் தளத்தில் ராய்க்குத் தெரியாமலே பகிரப் போய், பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர மாடல் ஒளிப்படக் கலைஞரான கௌதம் ரஜத்யாக்‌ஷா, ஐஸ்வர்யா ராயை வீடுவரைத் துரத்துகொண்டு வந்து, விளம்பர மாடலாக்கினார்.

இப்படி, முதலில் மருத்துவராகவும் பின்னர் ஆர்கிடெக் ஆகவும் ஆக விரும்பிய ஐஸ்வர்யா ராயின் வாழ்க்கையில் தோழிகளால் தான் விளம்பர உலகமும் சினிமாவும் நுழைந்தது. முதலில் நண்பராக அறிமுகமான அமிதாப் பச்சன் வழியாகவே அவரது மகன் அபிஷேக்கும் ஐஸ்வர்யாவுக்கு அறிமுகமாகி இருவரும் காதல் வயப்பட்டனர். பச்சன் குடும்பத்தின் நல்லெண்ணம் வழியாக அவர் திருமணத்துக்குப் பிறகும் படவுலகில் பவனி வந்தார். அதில் மணி ரத்னத்துக்கும், ராஜீவ் மேனனுக்கும் கணிசமான பங்கிருக்கிறது.  

வைரமுத்துவின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘50 கேஜி தாஜ்மாஹால்’ ஐஸ்வர்யா ராய் பச்சன், கடந்த மாதம் (நவம்பர் 1) தனது 50வது வயதைத் தொட்டபோது “நீங்கள் 25 வயதிலேயே இருக்கிறீர்கள்” என்று நெட்டிசன்களால் பாராட்டப்பட்டார். கடந்த 2007இல் அபிஷேக் பச்சனை காதல் திருமணம் செய்துகொண்டு, பச்சன் குடும்பத்தில் இணைந்த பிறகு ஆராத்யா என்கிற மகளைப் பெற்றெடுத்தபின் 85 கிலோவைத் தொட்டுவிட்டதற்காக ‘பெய்டு ட்ரோ’லுக்கு ஆளானார்.

என்னதான் போட்டி நட்சத்திர முகாம்களின் டிஜிட்டல் போர் வீரர்கள் அவரைப் புரட்டி எடுத்தாலும், அதற்கெல்லாம் அவர் அலட்டிக்கொள்ளவே இல்லை. மனதளவில் மிகவும் வலிமையான பெண் என்பதை 17 வயதில் காட்டினார். அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந் தபோது, பரத நாட்டிய பயிற்சியில் இடது கால் பாத எழும்பில் முறிவு ஏற்பட 6 மாத காலம் படாத பாடு பட்டார் ஐஸ்வர்யா. அந்த நேரத்தில் அவரது அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாமல்போக, மெர்செண்ட் நேவியில் பொறியாளராக கப்பல் பயணத்தில் இருந்த தனது அண்ணனைத் தொடர்பு கொள்ள முடியாமல், அம்மாவை நொண்டி நடக்க வேண்டிய பாதத்துடன் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினார். அந்த நேரத்தில் அவருக்கு உதவியது நண்பர்களே..

கடந்த ஏப்ரலில் 16வது திருமண நாளை கொண்டாடி, மகிழ்ச்சியான தம்பதியாக படமொன்றை அபிஷேக்கும் ஐஸ்வர்யாவும் பகிர்ந்திருந்த போதும், கடந்த 10 ஆண்டுகளாகவே கருத்து வேற்றுமைகளும் தொடர் சச்சரவுகளும் நிறைந்த வாழ்க்கையையே இருவரும் நடத்தி வருந்திருப்பதாக தற்போது ராய் மற்றும் பச்சன் குடும்பத்துக்கு நெருக்கமான மும்பை ஊடகங்கள் எழுதி வருகின்றன.

தம்பதிக்கிடையிலான தற்போதைய பிளவுக்கும் தற்போது இருதரப்பு நண்பர்களின் வழிகாட்டலே காரணம் என்று ஊடகங்கள் ஊகங்களை எழுதி வருகின்றன. மகள் ஆராத்யாவுக்காகவே இருவரும் இதுநாள் வரை இணைந்து வாழ்ந்ததாகவும் அப்பெண் தற்போது பக்குவம் அடைந்துவிட்ட பெரிய பெண்ணாகிவிட்டதால், அவள் தங்களுடைய பிரிவை ஏற்றுக்கொள்வாள் என்றும் கூறி தங்கள் பிரிவு குறித்து அதைத் தடுக்கப் போராடும் நண்பர்களுக்கு இவர்கள் சமாதானம் கூறி வருவதாகவும் ஊகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்
அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்

இப்போதைய பரபரப்பு ‘ஐஸ்வர்யா ராய் முற்றாகப் பிரிய முடிவெடுத்து விட்டதால் தான் அவர் பச்சன் வீட்டியிலிருந்து மகளுடன் வெளியேறி இருக்கிறார். கடந்த வாரம் ஐஸ்வர்யாவை தனது எக்ஸ் தளத்தில் பின் தொடர்வதிலிருந்து அமிதாப் பச்சன் அன் ஃபாலோ செய்ததையும் இதனுடன் முடிச்சு போடுகிறார்கள். ஐஸ்வர்யா ராய், பற்றி எரியும் இச்செய்திக்கு விரைவில் விளக்கம் அளிக்க முன்வருவர் என்று நம்பலாம். ஆனால், அவர் இந்த செய்திகள் சூடுபிடித்திருக்கும் கடந்த 1 வார காலமாகவே மௌனமாக இருக்கிறார். காலம் நட்சத்திர தம்பதியரின் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையில் கல்லெறிந்திருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...


ஐந்து பேரை காவு வாங்கிய ஐயப்ப பக்தர்கள் பேருந்து... ஆட்டோ மீது மோதியதில் மேலும் பலர் படுகாயம்!

ஒரே நாளில் ரூ.192 கோடி வருமானம்: பத்திரப்பதிவுத்துறை தகவல்

கருகலைப்புக்கு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: மருத்துவர் மீது வழக்குப்பதிவு

ஆம்னி பேருந்து- லாரி மோதி விபத்து: 2 ஓட்டுநர்களும் உயிரிழப்பு! உயிர் தப்பிய பயணிகள்

சரியும் தாவணி... மயக்கும் கண்கள்... அதிதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in