ஒரே நாளில் ரூ.192 கோடி வருமானம்: பத்திரப்பதிவுத்துறை தகவல்

ஒரே நாளில் ரூ.192 கோடி வருமானம்: பத்திரப்பதிவுத்துறை தகவல்

சுபமுகூர்த்த தினமான நேற்று பத்திரப்பதிவு மூலம் ஒரே நாளில் தமிழ்நாடு அரசுக்கு ரூ.192 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சுபமுகூர்த்த நாட்களில் கூடுதல் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அந்த வகையில் நேற்று (வியாழக்கிழமை) சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவண பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ.192 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”பதிவுத்துறையில் சார் பதிவகங்களில் 14.12.2023 அன்று ஆவணங்களின் பதிவு அதிகமாக எதிர்பார்க்கப்பட்டதால் கூடுதலாக டோக்கன்கள் வழங்கப்பட்டன. நேற்று பதிவு செய்யப்பட்ட 22,060 ஆவணங்களின் மூலம் அரசுக்கு வருவாயாக ரூ.192 கோடி வரப்பெற்றுள்ளது. இந்த நிதி ஆண்டில் பதிவுத்துறையில் ஒரே நாளில் இதுவரை வரப்பெற்ற வருவாயில் நேற்றைய தினம் பெறப்பட்ட வருவாயே மிக அதிகமானதாகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in