விவாகரத்து சர்ச்சை... போட்டோ போட்டு பதில் சொன்ன ஐஸ்வர்யா ராய்!

ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன்...
ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன்...

கடந்த சில மாதங்களாகவே ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் தம்பதியை விவாகரத்து சர்ச்சை வட்டமடித்து வருகிறது. ஆனால், இதுகுறித்து பச்சன் குடும்பத்தினர் எதுவும் வாய் திறக்கவில்லை. இப்படியான சூழ்நிலையில்தான் ஐஸ்வர்யா ராய் போட்டோ போட்டு இதற்கு பதில் கொடுத்திருக்கிறார்.

குடும்பத்துடன் ஐஸ்வர்யா ராய்...
குடும்பத்துடன் ஐஸ்வர்யா ராய்...

பாலிவுட்டின் நட்சத்திரத் தம்பதிகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஜோடி. காதல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு 12 வயதில் ஆராத்யா என்ற மகள் உள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது. திருமணம் ஆகி பத்து வருடங்கள் கடந்த நிலையில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் இதனால், ஐஸ்வர்யா தனது அம்மா வீட்டிற்குச் சென்று விட்டார் எனவும் செய்திகள் வரத் தொடங்கியது.

விரைவில் இந்த ஜோடி விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்றும் பாலிவுட் ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்புக் கூட்டியது. ஆனால், இதுகுறித்து பச்சன் குடும்பத்தினரோ அல்லது ஐஸ்வர்யா ராய் தரப்பிலோ எதுவும் பதிலளிக்கப்படவில்லை.

விவாகரத்துச் சர்ச்சை தங்களைச் சுற்றினாலும் இருவரும் பொது நிகழ்ச்சிகளும் ஒன்றாகவே குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர். இந்த நிலையில் தான் இந்த விவாகரத்து சர்ச்சைகளுக்கு பதில் சொல்லும் விதமாக நடிகை ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் மற்றும் ஆராத்யாவுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, அபிஷேக்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார்.

இதன் மூலம் விவாகரத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஐஸ்வர்யா. மேலும், தனது தாயின் உடல்நலனைக் கருத்தில் கொண்டே அவர் இப்போது அம்மா வீட்டில் இருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in