இளையராஜாவுக்கு அடுத்து உருவாகும் யுவன் பயோபிக்... வெளியான சூப்பர் தகவல்!

இளையராஜாவுக்கு அடுத்து உருவாகும் யுவன் பயோபிக்... வெளியான சூப்பர் தகவல்!

இளையராஜா பயோபிக்கை அடுத்து அவரது மகன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பயோபிக்கும் உருவாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயம் யுவன் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோபிக் உருவாகிறது. இதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கிறார். இதனை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் அறிவிப்பு விழா நடைபெற்றது. படத்தின் திரைக்கதையை நடிகர் கமல்ஹாசன் எழுதுகிறார்.

தனுஷ், இளையராஜா, கமல்
தனுஷ், இளையராஜா, கமல்

இதற்கிடையில் நடிகர் தனுஷூம் தன்னுடைய ‘ராயன்’ பட வெளியீடு மற்றும் ‘குபேரா’ படங்களில் பிஸியாக உள்ளார். இப்படியான சூழலில்தான் இளையராஜாவின் மகன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பயோபிக்கும் உருவாகிறது என இயக்குநர் இளன் கூறியுள்ளார்.

’பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கியவர் இளன். தற்போது கவின் நடிப்பில் மே 10 அன்று வெளியாக இருக்கும் ‘ஸ்டார்’ படத்தையும் இயக்கி இருக்கிறார். படத்தின் புரொமோஷனுக்காக தொடர்ந்து யூடியூப் தளத்தில் பேட்டிக் கொடுத்து வருகிறார் இளன். அதில், நேற்று வெளியான யூடியூப் பேட்டி ஒன்றில், யுவன் பயோபிக் உருவாகும் என்ற தகவலைப் பகிர்ந்துள்ளார்.

இளன் - யுவன் - கவின்
இளன் - யுவன் - கவின்

அந்தப் பேட்டியில் இளன், “யுவனுடைய பயோபிக் எடுக்க வேண்டும் என்று சொல்லி அவரிடமும் ஒன்லைன் சொல்லி இருக்கிறேன். அது அவருக்கும் பிடித்துவிட்டது. படத்தை நான்தான் இயக்குவேன் என்று சொல்லி, பேச்சுவார்த்தை அடிப்படையில் ஒப்பந்தமும் போட்டிருக்கிறேன். படத்தில் யுவனின் ஆரம்ப காலம், அவருடைய வளர்ச்சி என அனைத்து விஷயங்களும் இருக்கும்” என்று சொல்லி இருக்கிறார்.

இளையராஜாவுக்கு அடுத்தபடியாக யுவனின் பயோபிக்கும் விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள் என்ற செய்தி யுவன் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கோவிஷீல்டு களேபரங்கள்... உயிர்காக்கும் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் பயமுறுத்தக் கூடியதா?

அயோத்தி கோயிலில் மீண்டும் மோடி.... தேர்தல் வெற்றிக்காக சிறப்பு வழிபாடு!

ஹாலிவுட்டில் சோகம்... டைட்டானிக் பட நடிகர் திடீர் மரணம்!

இன்று முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!

இன்று ஸ்ரீரங்கத்தில் தேரோட்டம் கோலாகலம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in