அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்குத்தான் அதிக அன்பு... கங்கனா அதிரடி!

கங்கனா- அமிதாப்
கங்கனா- அமிதாப்

நடிகர் அமிதாப் பச்சனுக்கு அடுத்தபடியாக அதே அளவு அன்பு தனக்குத்தான் கிடைத்து வருகிறது என நடிகையும் பாஜகவின் மண்டி தொகுதி வேட்பாளருமான கங்கனா கூறியிருக்கிறார். இவரது இந்தப் பேச்சு நெட்டிசன்கள் மத்தியில் கேலியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்டத்தில் இமாச்சலப் பிரதேசம், மண்டி தொகுதிக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் அந்தத் தொகுதியின் பாஜக வேட்பாளர் கங்கனா. அவர் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே அவர் செய்யும் பல விஷயங்களும் இணையத்தில் சர்ச்சைக்குள்ளாகி கவனம் ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் தன்னை அவர் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கங்கனாவை கேலி செய்து வருகின்றனர். நேற்று மண்டி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, “நான் ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி, மணிப்பூர் என நாடு முழுவதும் எங்கு சென்றாலும் எனக்கு வியப்புதான்!

ஏனெனில், அந்த அளவுக்கு மக்கள் என்மீது அன்பு பொழிந்து வருகின்றனர். நடிகர் அமிதாப் பச்சனுக்குப் பிறகு, இந்தத் துறையில் யாருக்காவது இவ்வளவு அன்பும் மரியாதையும் கிடைக்கிறது என்றால், அது எனக்குத்தான்! இதை என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்" என்றார் கங்கனா. இந்த விஷயம்தான் நெட்டிசன்கள் மத்தியில் கேலி ஆகியுள்ளது.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

’கங்கனாவுக்கு கடைசியாக படம் ஹிட்டானது 2015-ல் தான். அதன் பிறகு, அடுத்தடுத்து 15 தோல்விப் படங்கள் கொடுத்துள்ளார். ஆனால், தன்னை அமிதாப்பச்சனுடன் ஒப்பிட்டுக் கொள்கிறார்’ என்றும், ’அவரது பேச்சுகளைப் பார்த்தால், தேர்தலில் வேட்பாளராக நடித்ததற்காக தேசிய விருதைப் பெறும் நாட்டின் முதல் நடிகையாக கங்கனா இருக்கலாம்’ என்றும் நெட்டிசன்கள் சொல்லி வருகின்றனர். இன்னும் சிலர், ’இந்த வருடத்தின் சிறந்த ஜோக் இதுதான்’ என்றும் ட்வீட் செய்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

கோவிஷீல்டு களேபரங்கள்... உயிர்காக்கும் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் பயமுறுத்தக் கூடியதா?

அயோத்தி கோயிலில் மீண்டும் மோடி.... தேர்தல் வெற்றிக்காக சிறப்பு வழிபாடு!

ஹாலிவுட்டில் சோகம்... டைட்டானிக் பட நடிகர் திடீர் மரணம்!

இன்று முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!

இன்று ஸ்ரீரங்கத்தில் தேரோட்டம் கோலாகலம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in