நடிகை விஜி சந்திரசேகர் மகள் திருமணம்...திரைப்பிரபலங்கள் திரண்டு வாழ்த்து!

மணமக்களை வாழ்த்திய திரைப்பிரபலங்கள்
மணமக்களை வாழ்த்திய திரைப்பிரபலங்கள்

நடிகை விஜி சந்திரசேகர் மகள் திருமணம் நடந்துள்ளது. இதில் நடிகர்கள் சூர்யா, மீனா எனத் திரைப்பிரபலங்கள் பலரும் திரளாகக் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

சுரக்‌ஷா திருமணம்
சுரக்‌ஷா திருமணம்

நடிகை விஜி சந்திரசேகருக்கு சுரக்‌ஷா, லவ்லின் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இளையமகள் லவ்லின் சினிமாத் துறையில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். இதில் மூத்த மகள் சுரக்‌ஷாவுக்குத் தொழிலதிபருடன் திருமணம் நடந்தது. இதில் நடிகர்கள் சூர்யா, நடிகை மீனா, நடன இயக்குநர் கலா மாஸ்டர் எனத் திரைப்பிரபலங்கள் பலரும் திரளாகக் கலந்து கொண்டனர். பிரபல தமிழ் நடிகை சரிதாவின் தங்கைதான் விஜி சந்திரசேகர். ரஜினியின் ‘தில்லு முல்லு’ படத்தில் நடித்துப் பிரபலமானார்.

அதன் பின்பு ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியான ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் அவர் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமல்லாது 'கந்தபுரம்’, ‘அமுதா ஒரு ஆச்சரியக்குறி’ போன்ற சீரியல்களிலும் அவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில்தான் அவரது மூத்த மகள் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்தத் திருமணத்தில் 1980 கதாநாயகிகள் சீதா, ராதிகா, ஜெயஸ்ரீ போன்றவர்களும், நடிகர்கள் சூர்யா, அருண் விஜய், சமுத்திரகனி, மோகன் உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டுள்ளனர். விஜி சந்திரசேகர் குடும்பத்திற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in