அயோத்தியில் இன்று முதல் பக்தர்கள் அனுமதி... உடை கட்டுப்பாடு... சிறப்பு பூஜைக்கு முன்பதிவு துவங்கியது!

அயோத்தியில் இன்று முதல் பக்தர்கள் அனுமதி... உடை கட்டுப்பாடு... சிறப்பு பூஜைக்கு  முன்பதிவு துவங்கியது!

இன்று காலை முதல் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு உடை கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே போன்று சிறப்பு பூஜைகளுக்கான முன்பதிவும் துவங்கியுள்ளது.

அயோத்தி ராமர் கோயிலில் கங்கனா...
அயோத்தி ராமர் கோயிலில் கங்கனா...

அயோத்தி ராமரை தரிசிக்க தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தினமும் காலை 7 முதல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

காலை 6.30 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் பால ராமருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த சிறப்புப் பூஜையை காணவும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவை https://srjbtkshetra.org/ என்ற இணையதளத்தில் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அணிய வேண்டிய உடை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆண்கள் வேஷ்டி, சட்டை, குர்தா-பைஜாமா, முண்டு என அழைக்கப்படும் வேஷ்டி, பருத்தி ஆடைகள் உள்ளிட்டவற்றை அணியலாம். ஷார்ட்ஸ், டீசர்ட்ஸ், ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணியக்கூடாது.

அதே போன்று பெண்கள், புடவை, பட்டு சேலை, சல்வார் கமீஸ், லெஹெங்கா சோளி, பலாஸ்ஸோ சூட் அணியலாம். ப்ளவுசுடன் கூடி லாங்க் ஸ்கர்ட் துப்பட்டாவுடன் அணியலாம்.

தோள்பட்டை மற்றும் முழங்கால் தெரியும் வகையிலான ஆடை, இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in