Trisha- Mansoor Issue: என்னை கொச்சையாக விமர்சித்த சீமான்... அப்போ குஷ்பு எங்க போனாங்க... கொந்தளிக்கும் விஜயலட்சுமி!

நடிகை விஜயலட்சுமி
நடிகை விஜயலட்சுமி

நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக நடிகர் மன்சூர் அலிகான் பேசியதற்கு மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என நடிகை குஷ்பு தெரிவித்தார். இதேபோல, என்னைப் பற்றி தவறாக பேசியதற்கு ஏன் சீமான் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என விஜயலட்சுமி ஆவேசமாக வீடியோவில் பேசியுள்ளார்.

’லியோ’ படத்தில் நடித்த போது நடிகை த்ரிஷாவை கற்பழிக்கும்படியான காட்சிகள் இருக்கும் எனத் தான் எதிர்பார்த்ததாகவும் ஆனால், அது நிறைவேறவில்லை எனவும் நடிகர் மன்சூர் அலிகான் பேசியது சச்சரவை ஏற்படுத்தியது. இது குறித்து நடிகை த்ரிஷா தனது கண்டனத்தை பதிவு செய்ய, திரைத்துறையினரும் ரசிகர்களும் த்ரிஷாவுக்கு ஆதரவாகத் தங்கள் கருத்தை பதிவிட்டனர். ஆனால், மன்சூர் அலிகானோ தவறாக யாரோ இதைப் பரப்பியுள்ளதாகக் அலட்சியமாகக் கூறியதோடு தனது செயலுக்காக வருந்தி அவர் மன்னிப்பும் கேட்கவில்லை.

மன்சூரின் இந்த செயலுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. மேலும், மன்சூர் அலிகான் தெரிவித்த இழிவான கருத்துகள் குறித்து தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்தார்.

இந்த நிலையில், நடிகை த்ரிஷாவிற்காக பரிந்து பேசும் நடிகை குஷ்பு, சீமானுக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லியும் ஏன் அன்று எடுக்கவில்லை என்று நடிகை விஜயலட்சுமி பேசியுள்ளார். வீடியோவில் அவர் பேசியதாவது, “அன்று சீமான் என்னை விபச்சாரி, 4 திருமணம் செய்தவர் நான் என்றெல்லாம் கூறும் போது எங்கே சென்றார்? தமிழிசை, குஷ்பு என உங்களையும்தானே டேக் செய்து கேட்டேன்” என்ற கேள்வியை முன்வைத்துள்ளார் நடிகை விஜயலட்சுமி. பாஜகவிற்கு ஆதரவாக சீமான் இருப்பதால் குஷ்பு அவரை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Shalini Ajith | அஜித் காட்டிய அக்கறை... வாழ்க்கையை ‘அமர்க்களமாய்’ மாற்றிய சினிமா!

துறைமுகத்தில் 60 படகுகள் எரிந்து நாசம்; கதறும் மீனவர்கள்!

1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டுக்கள்... அத்தாளநல்லூர் ஆய்வில் கண்டுபிடிப்பு!

ஐசியுவில் விஜயகாந்த்... என்ன சொல்கிறது மருத்துவமனை நிர்வாகம்?

பிக் பாஸில் மீண்டும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி... யார் அந்த மூன்று பேர்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in