மகளை கிளாமர் குயினாக்கிய வனிதா... ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகை வனிதாவின் 
 மகள் ஜோவிகா...
நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா...

நடிகை வனிதா விஜயகுமார் தனது மகளை திரையுலகில் அறிமுகப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால், மிக பெரிய விளம்பர வெளிச்சம் கிடைக்கும் என்று கூறி வந்த நடிகை வனிதா, தற்போது மகள் ஜோவிகாவின் கிளாமர் ஃபோட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஜோவிகாவின் கிளாமர் வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகை வனிதா விஜயகுமார், தனது மகள் ஜோவிகாவை பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக அறிமுகப்படுத்தினார். சினிமா, சீரியல் என பிஸியாக வலம் வரும் நடிகை வனிதா, தனது மூத்த மகள் ஜோவிகாவுக்கு நடிப்பின் மீது ஆர்வம் என்பதை பிக் பாஸ் மேடையில் தெரிவித்து, மகளை திரையுலகில் அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஜோவிகா...
ஜோவிகா...

நடந்து முடிந்த பிக் பாஸ் தமிழின் ஏழாவது சீசனில் ஜோவிகாவின் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளானது. குறிப்பாக, கல்வி குறித்து ஜோவிகா பேசியது பொதுவெளியில் விவாதங்களை ஏற்படுத்தியது.

ஜோவிகா...
ஜோவிகா...

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வரை ஜோவிகா செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிப் போட்டிக்கு வருவதற்கு முன்பே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் ஜோவிகா மீண்டும் உதவி இயக்குநராகத் தனது பயணத்தைத் தொடர்ந்தார். பார்த்திபனின் புதிய படம் ஒன்றில் இப்போது பணிபுரிந்து வருகிறார் ஜோவிகா.

நடிப்புதான் தனது ஆசை என்றாலும் சினிமா பற்றிய புரிதல் வேண்டும் என்பதற்காகவே உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருவதாக கூறியிருக்கும் ஜோவிகா, மாடர்ன் உடையில் கிளாமர் போட்டோஷூட் நடத்தியிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் படங்களை வீடியோவாகத் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் வனிதா.

இதையும் வாசிக்கலாமே...

'இந்திய இசைக்குழுவினருக்கு கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!

அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!

ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!

நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்...  அரசியலில் பரபரப்பு!

ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in