பிக் பாஸ்: ரிஸ்க் எடுத்துதான் என் மகளை அனுப்பி இருக்கிறேன்... வனிதா விஜயகுமார் பேட்டி!

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்

பிக் பாஸ்7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தன் மகள் ஜோவிகா விஜயகுமார் பங்கேற்றது பற்றிய கேள்விக்கு சமீபத்திய நிகழ்வு ஒன்றில் நடிகை வனிதா விஜயகுமார் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், “எல்லாருக்குமே ஒவ்வொரு தனித்துவமான குணம் இருக்கு. அவர்களுடைய அனுபவம் மற்றும் அவங்களுடைய கேரக்டரை யாருமே மாற்றக்கூடாது. அதனால், நான் தனியாக எதுவும் சொல்லி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் ஜோவிகாவை அனுப்பவில்லை. சினிமாவில் அவள் படம் நடிக்கும் போது கண்டிப்பாக  என்னுடைய அபிப்ராயத்தைச் சொல்வேன். ஏனெனில் அதில் எனக்கு நிறைய அனுபவம் இருக்கிறது.

ஜோவிகா
ஜோவிகா

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு ரியாலிட்டி ஷோ. ஜோவிகாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் திறமை இருப்பது தெரிந்து அந்த தைரியத்தில்தான் அவளை அனுப்பி வைத்தேன்.என் பொண்ணு மேல சந்தேகம் இருந்திருந்தால் கண்டிப்பாக அவளுடைய கேரியர் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து இருக்க மாட்டேன்.

ஜோவிகாவின் ஒரு தனித்தன்மை கொண்ட பெண்.  சீக்கிரம் நீங்களே இதைப் புரிந்து கொள்வீர்கள். அதே போல் என்னுடைய ரிவியூ நிகழ்ச்சியில், கண்டிப்பாக யார் தப்பு செய்திருந்தாலும் சொல்வேன். என் மகள் தப்பையும் சுட்டிக்காட்டுவேன்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!

ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!

அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in