சுசித்ராவின் தாறுமாறு பேச்சு... பதிலடி கொடுத்த நடிகை த்ரிஷா!

சுசித்ராவின் தாறுமாறு பேச்சு... பதிலடி கொடுத்த நடிகை த்ரிஷா!

தன்னை வம்பிழுத்துப் பேசியதற்காக பின்னணிப் பாடகி சுசித்ராவுக்கு நடிகை த்ரிஷா தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.

இன்று காலை முதலே இணைய உலகில் பேசுபொருளாகி இருக்கிறார் பின்னணிப் பாடகி சுசித்ரா. தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து, தனது முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர், ஐஸ்வர்யாவும், தனுஷூம் திருமணத்திற்குப் பின்னரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றி வந்தது என்று அடுத்தடுத்து பரபரப்புகளுக்கு கொஞ்சம் பஞ்சமில்லாமல் பேட்டியளித்து திரையுலகை அதிர வைத்திருக்கிறார் சுசித்ரா.

நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா

இதில் அவர் நடிகர் த்ரிஷாவையும் வம்பிழுக்கத் தவறவில்லை. சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் த்ரிஷா குறித்தும் பேசியிருக்கிறார். கடந்த 2016ல் சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் பல பிரபலங்களில் அந்தரங்கமான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்புக் கூட்டியது.

த்ரிஷா, அக்‌ஷராஹாசன் எனப் பல பிரபலங்கள் இதில் சிக்கினர். இந்த சம்பவத்திற்குப் பிறகு சுசித்ராவின் திருமணம் வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்தது. இப்போது கொடுத்திருக்கும் பேட்டியில் இந்த சுச்சி லீக்ஸ் வெளியிட்டதே தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக்குமாரும் நடிகர் தனுஷூம் சேர்ந்துதான் எனக் கூறியிருக்கிறார்.

மேலும், தன்னுடைய பெர்சனல் புகைப்படங்களை நடிகை த்ரிஷாவே எடுத்துக் கொடுத்தார் என்ற ரீதியில் பேசியிருந்தார் சுசித்ரா. இந்த விஷயத்திற்கு த்ரிஷா ரியாக்ட் செய்துள்ளார். தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் மறைமுகமாக, ’நான் சரியாக இருந்தாலும் இந்த உலகம் குறை கூறுகிறது. உண்மையை திரித்துப் பேசுகிறது’ என்று அப்செட் ஆகி இருக்கும் எமோஜியைப் பகிர்ந்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு!

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!

அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in