18 வருடங்கள் கழித்து மெகா ஸ்டாருக்கு ஜோடியான நடிகை த்ரிஷா... சூப்பர் அப்டேட்!

சிரஞ்சீவியுடன் த்ரிஷா...
சிரஞ்சீவியுடன் த்ரிஷா...

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் நடிகை த்ரிஷா இணைந்துள்ளார். இதையடுத்து த்ரிஷாவை படப்பிடிப்புத் தளத்திற்கு வரவேற்று பூங்கொத்துக் கொடுத்துள்ளார் நடிகர் சிரஞ்சீவி.

’பொன்னியின் செல்வன்’, ‘லியோ’ படங்களுக்குப் பிறகு நடிகை த்ரிஷா தற்போது தமிழில் நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தொடக்கம் முதலே அஜர்பைஜான் நாட்டில் நடந்து வந்தது. சமீபத்தில் எங்கு படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அப்டேட் கொடுத்தது. இந்தப் படம் மட்டுமல்லாது, மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படமும், தமிழில் இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் கமலுடன் ‘தக் லைஃப்’ படமும் த்ரிஷா கைவசம் உள்ளது. தமிழில் நடிகை த்ரிஷாவுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருப்பது போலவே, தெலுங்கில் அவருக்கு நிறைய ரசிகர்கள் உண்டு.

தமிழைப் போலவே, தெலுங்கிலும் நிறையப் படங்கள் நடிக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் அவருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகை த்ரிஷா சிரஞ்சீவியின் 156-வது படமான ’விஸ்வாம்பரா’ படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார் த்ரிஷா.

இதன் படப்பிடிப்பு ஏற்கெனவே நடந்து வரும் நிலையில், த்ரிஷாவும் தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். படப்பிடிப்புத் தளத்துக்கு வந்த அவருக்கு சிரஞ்சீவி மற்றும் படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளனர்.

இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள த்ரிஷா, ‘18 வருடங்கள் கழித்து மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து பணிபுரிவதில் பெருமை’ எனத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு முன்பு கடந்த 2006-ல் ‘ஸ்டாலின்’ என்ற படத்தில் இந்த ஜோடி சேர்ந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

'இந்திய இசைக்குழுவினருக்கு கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!

அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!

ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!

நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்...  அரசியலில் பரபரப்பு!

ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in