‘இப்பவும் பிகினிக்கு ரெடி; தேவைப்பட்டா நிர்வாணமாகவும் நடிப்பேன்...’ ரசிகர்களை அலற வைத்த ஸ்வேதா மேனன்!

நடிகை ஸ்வேதா
நடிகை ஸ்வேதா
Updated on
2 min read

“இப்பவும் பிகினி அணிந்து நடிக்க தயார். இவ்வளவு ஏன்... கதைக்கு பொருத்தமாக இருந்தால் நிர்வாணமாகவும் நடிக்க தயாராக தான் இருக்கிறேன். மீண்டும் காமசூத்ராவில் நடிக்கவும் தயார் தான்” என்று பேட்டியளித்து, 50 வயதில் ரசிகர்களை அலற வைத்திருக்கிறார் நடிகை ஸ்வேதா மேனன்.

நடிகை ஸ்வேதா
நடிகை ஸ்வேதா

மலையாள திரையுலகில் தனது கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்த நடிகை ஸ்வேதா மேனேன், மாடலிங் துறையில் இருந்து திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தவர்.

மலையாளத்தில் அறிமுகமான முதல் படத்திலேயே மம்முட்டியுடன் நடித்து, அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகிலும் ரசிகர்களை மயக்கியவர். தமிழில், ’சிநேகிதியே’, ‘நான் அவனில்லை2’, ‘இணையதளம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இப்போதும் அடுத்தடுத்து தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வரும் ஸ்வேதா மேனன் நேற்று வெளியிட்டிருக்கும் போல்டான ஸ்டேட்மெண்ட் தான் ரசிகர்களை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.

காமசூத்ரா விளம்பரத்தில் ஸ்வேதா...
காமசூத்ரா விளம்பரத்தில் ஸ்வேதா...

“நான் எதைச் செய்தாலும் அது நல்லதா? கெட்டதா? என ரொம்ப யோசிக்க மாட்டேன். இதுவரை நான் நடித்த எந்த படங்கள் குறித்தும் எனக்கு வருத்தமில்லை. எல்லாவற்றையும் தெரிந்துதான் செய்தேன். தெரியாமல் செய்ததாக எதையும் கூற முடியாது. யாராவது என்னிடம் பிகினியில் நடிக்கச் சொன்னால், இப்போதும் கூட நான் பிகினி அணிய தயாராகவே இருக்கிறேன். படத்தின் கதாபாத்திரத்திற்கு தேவையாக இருந்தால் நான் நிர்வாணமாகவும் நடிப்பேன்” எனக் கூறி அதிர வைத்துள்ளார்.

‘காமசூத்ரா’ விளம்பரத்தில் நடித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய போது, மீண்டும் ‘காமசூத்ரா’ எடுத்தால், அதில் நடிக்கவும் தயாராகவே இருக்கிறேன் என்று கூறி மேலும் அதிர்ச்சி கூட்டியிருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...


தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!

கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in