டேட்டிங் ஷோ மூலம் தமிழில் தொகுப்பாளினியான சன்னி லியோன்...ரசிகர்கள் உற்சாகம்!

சன்னி லியோன்
சன்னி லியோன்

பிரபல டேட்டிங் ஷோவை தொகுத்து வழங்கி தமிழில் தொகுப்பாளினியாக களமிறங்கி இருக்கிறார் நடிகை சன்னி லியோன். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சின்னத்திரையில் சீரியல்களுக்கு இணையாக ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பாட்டு, நடனம், சமையல், பிக் பாஸ் என ஹிட்டடித்த ரியாலிட்டி ஷோக்கள் வரிசையில் டேட்டிங் ரியாலிட்டி நிகழ்ச்சியை தமிழில் இறக்கி இருக்கிறது.

அந்த வகையில், ‘Splitsvilla X5: ExSqueeze Me Please’ என்ற எம்.டிவியின் பிரபல டேட்டிங் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

‘Splitsvilla X5: ExSqueeze Me Please’
‘Splitsvilla X5: ExSqueeze Me Please’


இதில் நிகழ்ச்சியை நடிகர்கள் தனுஜ் மற்றும் உர்ஃபியுடன் இணைந்து சன்னி லியோன் தொகுத்து வழங்கி வருகிறார். இதன் மூலம் தமிழிலும் சன்னி தொகுப்பாளினியாக அறிமுகமாகி இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 21 இளம் போட்டியாளர்கள் தங்கள் காதலை கண்டுபிடிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி இளமை துள்ளலுடன் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 7 மணிக்கு எம் டிவி மற்றும் ஜியோ சினிமாவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வில்லாவில் நடைபெற்ற ரியாலிட்டி டேட்டிங் விளையாட்டில் இருந்து ரியல் லைஃப்புக்கு இவர்கள் மூன்று பேரும் தற்போது திரும்பி உள்ளனர்.

நிகழ்ச்சியின் போட்டியாளர்கள்...
நிகழ்ச்சியின் போட்டியாளர்கள்...

அதாவது ஒரே நேரத்தில் மூன்று பேர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். 21 பேரில் 3 பேர் வெளியேறியுள்ள நிலையில், மீதம் உள்ள 18 பேருடன் ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

காதல் விளையாட்டில் பொறாமை, வஞ்சம், வெளியேற்றும் யுக்தி உள்ளிட்டவற்றை கற்றுக் கொண்ட போட்டியாளர்கள், தங்கள் காதலைக் கண்டறிவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in