கல்யாணத்துக்கு ஜாதக பொருத்தத்தை விட ரத்த பரிசோதனைதான் முக்கியம்... நடிகை சுஹாசினி!

சுஹாசினி மணி ரத்னம்
சுஹாசினி மணி ரத்னம்

”திருமணத்திற்கு ஜாதகம் பொருத்தம் பார்ப்பதை விடவும் ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது முக்கியம்” என நடிகை சுஹாசினி பேசியிருக்கிறார்.

தலசீமியா எனும் இரத்த சோகை நோய் பற்றியும், மருத்துவர்கள் வழிகாட்டுதல் படிதான் மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும் நடிகை சுஹாசினி இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஊடகத்திடம் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசியிருப்பதாவது, “கடந்த நான்கைந்து வருடங்களில்தான் தலசீமியா பற்றியே எனக்குத் தெரிய வந்தது.

நடிகை சுஹாசினி
நடிகை சுஹாசினி

இதனைக் குறைபாடு என்று சொல்வதை விட, கண்டிஷன் என்றே சொல்லலாம். என்னுடைய வயதுக்கு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் நான் இரத்த தானம் செய்து வருகிறேன். தலசீமியா பற்றி இன்று நான் பேசுவது தற்செயலான ஒன்றுதான்.

நானெல்லாம் வீட்டில் பார்த்தபடிதான் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஜாதகம் பார்க்கவில்லை. ஆனால், ஒரு சிலர் பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம். நான் சொல்ல வருவது என்னவென்றால் ஜாதகம், கம்யூனிட்டி, உயரம் என இதெல்லாம் பார்ப்பதை விட ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது எந்த அளவுக்கு முக்கியம் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நடிகை சுஹாசினி
நடிகை சுஹாசினி

மாலத்தீவுகளில் எல்லாம் பொண்ணும் மாப்பிளையும் ரத்தப் பரிசோதனை செய்து கொண்டால் மட்டுமே மேரேஜ் சர்டிஃபிகேட் தருவார்கள். தலசீமியா பற்றி நிறைய தவறான கருத்துகள் பரவி வருகிறது. அதை எல்லாம் நம்பாமல் உங்கள் மருத்துவர்களுடைய வழிகாட்டுதலைப் பின்பற்றுங்கள்.

முன்னாடி நாம் எப்படி நம் வீட்டுப் பெரியவர்கள், ஆசிரியர்கள் பேச்சைக் கேட்டு நடந்தோமோ அப்படி இனிமேல் நம் வாழ்க்கை முறையை மருத்துவர்கள் சொல்படி கேட்டு நடக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!

ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

அனுபவம் பத்தாது... அரசியல் வாரிசாக அறிவித்தவரை அதிரடியாக நீக்கிய மாயாவதி

பரபரப்பு... பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in