புது பிசினஸ் தொடங்கும் நடிகை சிநேகா... ரசிகர்கள் வாழ்த்து!

நடிகை சிநேகா
நடிகை சிநேகா

நடிகை சிநேகா தற்போது புதுத்தொழில் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள அவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

நடிகை சிநேகா
நடிகை சிநேகா

சினிமாவில் நடிகர், நடிகைகள் நடிப்பதைத் தாண்டி பல்வேறு துறைகளில் கால் பதித்து வருகின்றனர். தயாரிப்பு, இயக்கம் என சினிமாவிற்குள்ளேயே வெவ்வேறு துறைகளில் புகழ் பெறுவது மட்டுமல்லாது, சினிமா தாண்டியும் வேறு துறைகளிலும் பிசினஸ் செய்கின்றனர். அப்படி நடிகை நயன்தாரா அழகு, உணவு போன்ற பிசினஸ், சமந்தா துணி பிசினஸ், காஜல் நகை பிசினஸ், கத்ரீனா பியூட்டி பிசினஸ் என இந்தப் பட்டியல் ரொம்பவே நீளம். அப்படித்தான் நடிகை சிநேகாவும் தற்போது புது பிசினஸ் ஒன்றில் இறங்கியுள்ளார்.

’சிநேஹாலயா சில்க்ஸ்’ என புடவை பிசினஸை தொடங்கியுள்ளார் சிநேகா. இதற்கான திறப்பு விழா வருகிற 12 ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக பத்திரிக்கை கொடுத்து தனக்கு நெருக்கமான திரையுலக பிரபலங்களையும் நண்பர்களையும் அழைத்துள்ளார் சிநேகா. சிநேகாவின் சகோதரி கீதாவும் இதேபோன்ற துணி பிசினஸ் செய்து வரும் வேளையில், நடிகை சிநேகா புடவைக்கென்றே தனியாக கடை ஒன்றைத் திறக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை அவருக்குக் கூறி வருகின்றனர். சிநேகா தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘GOAT' படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!

நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

கணவரைப் பிரிந்தார் சூர்யா பட நடிகை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in