நாற்பது வயதானால் கறிவேப்பிலைபோல தூக்கி எறிந்து விடுகிறார்கள்... நடிகை ரேகா வேதனை!

நடிகை ரேகா
நடிகை ரேகா

அறிமுக இயக்குநர் மாலதி நாராயணன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் 'மிரியம்மா’. நடிகை ரேகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாற்பது வயது தாண்டிய குழந்தைப்பேறு, லெஸ்பியன் என கவனம் ஈர்த்தது சமீபத்தில் வெளியான ‘மிரியம்மா’ பட டிரெய்லர். இதன் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடந்தது.

’மிரியம்மா’ படத்தில் நடிகை ரேகா
’மிரியம்மா’ படத்தில் நடிகை ரேகா

இதில் நடிகை ரேகா பேசும் போது, “நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதை நினைக்கும் போது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. ஒரு படத்தில் நாம் நடித்த கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லி நம்மை யாராவது அழைக்கும் போது மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கும். தமிழில் ஜெனிபர் டீச்சர்,  ரஞ்சனி, உமா போன்ற கதாபாத்திரங்கள் எனக்கு அப்படி அமைந்தது. அதுபோல் மலையாளத்தில் ராணி, மீனுக்குட்டி போன்ற கதாபாத்திரங்கள் பேர் சொல்வது போல் அமைந்தது. அந்த வரிசையில் கண்டிப்பாக இந்த 'மிரியம்மா'வும் இடம்பெறும் என்று நம்புகிறேன். 

பல படங்களில் நடித்து நான் பெயர் எடுத்துவிட்டேன். இந்த வயதில் என்னைப் போன்ற நடிகைகளுக்கு இப்பொழுது பணம் ஒரு பொருட்டல்ல. நாங்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து எங்களை நிரூபிக்க விரும்புகிறோம். நாற்பது வயது ஆகிவிட்டாலே கறிவேப்பிலையை தூக்கி எறிவதுபோல் எங்களை எறிந்துவிடுகிறார்கள். கமர்ஷியல் திரைப்படங்களால் கதாநாயகிக்கான முக்கியத்துவம் போய்விட்டது.

’மிரியம்மா’ பட விழா
’மிரியம்மா’ பட விழா

எல்லோரும் என்னை ஃபாரினில் சென்று செட்டில் ஆகிவிட்டீர்களா என்று கேட்கிறார்கள். நான் எப்பொழுதுமே சென்னையில் இருக்கவே விரும்புகிறேன்.  நிறைய திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன்.  உயிருள்ள வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என் ஆசை. 

சின்ன பட்ஜெட்டில் தொடங்கிய இப்படம் முடியும் போது பெரிய பட்ஜெட் திரைப்படமாக மாறிவிட்டது. இப்படத்திற்கு நீங்கள் ஆதரவு தந்து படத்தை வெற்றிப்படமாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in