'அனிமல்’ தந்த அதிர்ஷ்டம்... நாலு கோடி சம்பளம் கேட்கும் ராஷ்மிகா?

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

'அனிமல்’ படம் கொடுத்த அதிர்ஷ்டத்தால் ராஷ்மிகா அடுத்தப் படத்திற்கு நான்கு கோடி வரை சம்பளம் உயர்த்திவிட்டார் என்ற செய்தி வலம் வருகிறது. இதற்கு ராஷ்மிகா பதிலும் கொடுத்துள்ளார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா

கடந்த டிசம்பர் மாதம் வெளியான ‘அனிமல்’ படம் இணையவெளியில் பெரும் விவாதங்களைக் கிளப்பியது. ஆல்ஃபா ஆண் என்ற விஷயமும், பெண் கதாபாத்திரங்கள் மிக மோசமாக இந்தப் படத்தில் எழுதப்பட்டிருக்கிறது எனவும் இந்தப் படத்தின் கதை மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தது.

மேலும், இந்து -இஸ்லாமிய வெறுப்பும் இந்தக் கதையில் அப்பட்டமாக இருக்கிறது எனக் கடுமையான விமர்சனங்களை இந்தப் படம் எதிர்கொண்டது. இதற்கு படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, ‘ஆல்ஃபா ஆண் குறித்தும் பிறவற்றைக் குறித்தும் விவாதம் எழுந்திருப்பது ஆரோக்கியமானதே’ எனக் கூறினார்.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

இப்படி பல விமர்சனங்களை இந்தப் படம் எதிர்கொண்டிருந்தாலும் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 1000 கோடி வசூலை நெருங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக சக்சஸ் பார்ட்டியும் படக்குழு கொண்டாடியது. அப்படி இருக்கும் போது பாலிவுட்டில் வெற்றிப் படம் கொடுத்ததால் அடுத்தப் படத்திற்கு நடிகை ராஷ்மிகா நான்கு கோடி வரை சம்பளத்தை உயர்த்தி விட்டார் என்ற செய்தி உலா வந்தது.

இதற்குதான் ராஷ்மிகா பதில் கூறியுள்ளார். ”இந்த செய்திகளைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த செய்திகளை ஏன் பொய்யாக்க வேண்டும்? இந்த செய்திகளைக் காட்டி, இதன்படி வாழ வேண்டும் என என் தயாரிப்பாளர்களிடம் அதே சம்பளம் கேட்கலாம் என்று நினைக்கிறேன். நான் சொல்வது சரிதானே?” என நகைச்சுவையாக இதை மறுத்துள்ளார் ராஷ்மிகா.

’அனிமல்’ படத்தில் ரன்பீருடன் அதிகளவில் லிப்லாக் காட்சிகளில் நடித்ததற்காக அதிக சம்பளம் வாங்கினார் ராஷ்மிகா என செய்தி வந்ததும் அதை ராஷ்மிகா அப்போதே மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!

கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in