கைது செய்ய சென்ற போலீஸார்... பகீர் குற்றச்சாட்டை கூறிய நடிகை ரஞ்சனா!

நடிகை ரஞ்சனா நாச்சியார்
நடிகை ரஞ்சனா நாச்சியார்

உடை மாற்றிக் கொண்டிருந்தபோது படுக்கையறையில் எட்டிப்பார்த்தார் என கைது செய்ய வந்த போலீஸாரிடம் நடிகை ரஞ்சனா நாச்சியார் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

போரூரிலிருந்து குன்றத்தூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, கெருகம்பாக்கம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது அதில் பயணம் செய்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிய படியும், பேருந்தின் கூரை மீது ஏறி நின்றபடியும் பயணம் செய்தனர்.

இதனை தனது செல்போனில் வீடியோ எடுத்த பெண் ஒருவர், நிறுத்தத்தில் பேருந்து நின்றவுடன், ஓட்டுநரிடம் சென்று இப்படியா பேருந்து ஓட்டுவீர்கள் என்று திட்டி விட்டு, படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அடித்து கீழே இறக்கிவிட்டார்.

நடிகை ரஞ்சனா நாச்சியார்
நடிகை ரஞ்சனா நாச்சியார்

தன்னை போலீஸ் என்று கூறிய அந்த பெண் மாணவர்களை அடித்து கீழே இறக்கிவிட்ட பிறகு, நடத்துநர் மற்றும் ஓட்டுநரை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இந்த நிலையில் பேருந்து ஓட்டுநர் சரவணன் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து அந்தப் பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

நடிகை ரஞ்சனா நாச்சியார்
நடிகை ரஞ்சனா நாச்சியார்

அப்போது போலீஸார் அவரை கைது செய்வதாக தெரிவிக்க, உடனே அடுத்த சர்ச்சையை ஆரம்பித்தார் ரஞ்சனா. “நான் படுக்கை அறையில் உடை மாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு ஆண் போலீஸ் வந்து என் அறையின் ஜன்னல் கதவை தட்டி, எட்டிப் பார்க்கிறார். அராஜகமாக என்னை அழைத்தனர்.

பிறகு என் காரிலேயே வருகிறேன் என்று சொன்னதற்கு மறுத்துவிட்டனர். அவர்கள் என்னை கைது செய்வதால் வேறு வாகனத்தில் வருவதற்கு அனுமதி இல்லை என்றனர். ’என்னை குற்றவாளி போல் நடத்தி அராஜகம் செய்கிறீர்களே... என் வண்டியில் வந்தால் என்ன? நான் ஸ்டேஷனுக்கு வருகிறேன். வழக்கை சந்திக்கிறேன்” என்றார்.

தன் தாயைப் பார்க்க அனுமதி வேண்டும் எனக் கேட்ட ரஞ்சனாவை போலீஸார் இழுத்து சென்றனர். பசங்க படிக்கட்டில் பயணம் செய்வதைத் தட்டிக் கேட்டது தவறா என அவர் வாக்குவாதத்தில் ஈடுபட அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in