ரூ. 358 கோடி, 2800 மணிநேரம்... கண்ணைக் கவர்ந்த நடிகை பிரியங்கா சோப்ராவின் வைரநகை!

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா

ரூ. 358 கோடி மதிப்பிலான வைரநகை அணிந்து நடிகை பிரியங்கா சோப்ரா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது காதலர் நிக் ஜோன்ஸ் உடனான திருமணத்திற்குப் பிறகு ஹாலிவுட்டிலும் படங்கள் நடித்து வருகிறார். இவர் ரோம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரூ. 358 கோடி மதிப்பிலான வைரநகை அணிந்து அசத்தியிருக்கிறார். அதாவது Bvlgari என்ற பிராண்டின் அம்பாசிடர் நடிகை பிரியங்கா சோப்ரா.

இந்த பிராண்டின் 140வது ஆண்டு விழாவில் இந்த நிறுவனம் ஸ்பெஷலாக வடிவமைத்த பிரியங்காவின் நகைதான் அனைவரது கண்களையும் பறித்திருக்கிறது. Serpenti Aeterna எனப் பெயர் கொண்ட இந்த நகையில் 140வது ஆண்டு விழாவை முன்னிட்டு 140 காரட் வைரங்களைக் கொண்டு சுமார் 2800 மணி நேரம் செலவழித்து இதை வடிவமைத்து இருக்கிறார்கள்.

இந்த நிகழ்வில் பிரியங்காவுடன் நடிகைகள் ஹத்வே, லியூ இஃபை போன்ற ஹாலிவுட் நடிகைகளும் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளனர். சில பல ஆயிரங்கள் கையில் இருந்தாலே நகை எடுக்க ஆசைப்படும் பெண்கள், பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரம் பதித்த பிரியங்காவின் நகையைப் பார்த்து ஆச்சரியத்தில் உள்ளனர்.

பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த நகை...
பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த நகை...

’எங்களுக்கும் இதே போன்று நகை வேண்டும்’ என்று தங்கள் கணவன்மார்களை பலரும் டேக் செய்யத் தொடங்கி விட்டனர். ’மேட்ரிக்ஸ்4’ படத்தை அடுத்து பிரியங்கா சோப்ரா ‘ஹெட் ஆஃப் ஸ்டேட்ஸ்’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

வங்கக்கடலில் புயல் சின்னம்... தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொட்டப் போகிறது கனமழை!

சோகம்... போலீஸ்காரருடன் தூக்கில் தொங்கிய இளம்பெண்!

காதலித்ததால் ஆத்திரம்... தங்கையை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த அண்ணன்கள்

மதுரை எய்ம்ஸ் திட்ட மதிப்பு... ரூ.1,978 கோடியிலிருந்து ரூ.2,021 கோடிகளாக உயர்வு!

உயர் தொழில்நுட்பம் படித்த தமிழர்களைக் குறிவைக்கும் வெளிநாட்டு மோசடிக் கும்பல்... கலெக்டர் எச்சரிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in